பள்ளி , கல்லூரி, மால்கள், திரையரங்குகளில் மாஸ்க் கட்டாயம்!! முதல்வர் அதிரடி உத்தரவு!!

 
மாஸ்க்

சீனாவில் மீண்டும் கொரோனா ஜெட் வேகத்தில் பரவத் தொடங்கியுள்ளது. இதனால் உலக நாடுகள் பீதியில் உறைந்துள்ளன.  இதேபோன்று அமெரிக்கா, பிரேசில், ஜப்பான், கொரிய குடியரசு பகுதியில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனை முன்னிட்டு இந்தியா  உட்பட உலகின் மற்ற  நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகிறது. அந்த வகையில் கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை, அமைச்சர்கள்,  சுகாதார துறை உயரதிகாரிகள் மற்றும் கொரோனா தொழில்நுட்ப அறிவுறுத்தல் குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

மாஸ்க்

இந்த கூட்டத்தின் முடிவில் கர்நாடகாவில் மூடிய பகுதிகள், குளிரூட்டப்பட்ட அறைகள் மற்றும் உள் அரங்குகளில் முக கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்க அரசு முடிவு செய்தது. இந்நிலையில், கர்நாடக சுகாதார அமைச்சர்  சுதாகர் விடுத்த செய்திக்குறிப்பில் கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் திரையரங்குகளில் முகக்கவசம் அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறும்  பப்கள், உணவு விடுதிகள் மற்றும் பார்களில் முக கவசம் அணிவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொண்டாட்டங்கள் இரவு ஒரு மணியுடன் முடிவுக்கு வரும். யாரும் அச்சப்பட வேண்டியதில்லை.

பொம்மை

அதே நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அத்துடன் விமான நிலையங்களில் சர்வதேச பயணிகளிடம் ரேண்டம் அடிப்படையில் 2 சதவீத பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  மருத்துவமனைகளில் தேவையான அளவு படுக்கை வசதிகள், ஆக்சிஜன் வினியோகத்துடன் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளில் கொரோனா வார்டுகளை திறக்கவும் கர்நாடக அரசு முடிவு செய்து உள்ளது.மறு உத்தரவு வரும் வரை இந்த நடவடிக்கையானது தொடரும் என முதல்வர் தெரிவித்துள்ளார். 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web