மாஸ் வீடியோ!! டேங்கர் லாரியில் திருமணத்திற்கு வந்த மணப்பெண்!!

 
தலீஷா

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பது எல்லாம் மலையேறி விட்டது. சொர்க்கத்தை இங்கே உருவாக்கு . திருமணத்தை கொண்டாடு. வாழ்வில் ஒரு தடவை வரும் திருமணத்தில் என்னென்ன புதுமைகள் , கொண்டாட்டங்கள் முடியுமோ அத்தனையும் செய்துவிடு என்பது தான் லேட்டஸ்ட் ட்ரெண்ட். முன்பு நடைபெற்ற திருமணங்களில் மணமகள் பயந்து கொண்டே திருமண மண்டபத்தில் நுழைவாள். காலம் மாறி விட்டது.  காலத்துடன்..  சேர்ந்து திருமண நடைமுறைகளும் மாறிக்கொண்டே இருக்கின்றன.  இப்போதெல்லாம் மணமகள் தாங்கள் திருமண வாழ்வில் எவ்வளவு மகிழ்ச்சியாக நுழைகிறோம் என்பதை காட்டுவதற்காக பைக் மற்றும் காரை ஓட்டி மகிழ்ந்து மண்டபத்திற்கு வருகிறார்கள்.


சமீப காலமாக புல்லட் வண்டியில் மணப்பெண்கள் நுழைவது தான் லேட்டஸ்ட் டிரெண்ட். சமீபத்தில் புதுப்பெண் ஒருவர் பைக், காரில் அல்ல, லாரியில் வந்து அசத்தியுள்ளார். அதுவும் தன் அருகில் வரப்போகும் கணவனை உட்கார வைத்து.. தானே லாரியை ஓட்டிக்கொண்டு.. மாஸ் என்ட்ரி கொடுத்தாள்.கேரள மாநிலம் மணலூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் தலிஷா.இவருக்கு எப்போதும் லாரி ஓட்டுவதில் ஆர்வம் அதிகம். அவரது தந்தை லாரி டிரைவர் என்பதால், தலிஷாவுக்கும் சிறுவயதில் இருந்தே லாரி ஓட்டுவது மிகவும் விருப்பமான செயல். பள்ளிப் படிப்பிற்கு முதலில் செய்த காரியம் லாரி ஓட்ட உரிமம் பெற்றது தான். சாதாரணமாகே சில சமயங்களில் தந்தை இல்லாமல், தனது பெட்ரோல் டேங்கரை ஓட்டி, கொச்சியில் இருந்து பெட்ரோல் கொண்டு வந்து, மலப்புரம் பங்க்குக்கு சப்ளை செய்வது வழக்கம் தான்.

தலீஷா

தலிஷா இப்படி பெட்ரோல் டேங்கர் ஓட்டிச் செல்லும் போது, ​​சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளனர். 
ஒரு வளைகுடா நிறுவனம் தலிஷாவின் ஓட்டும் திறமையைப் பார்த்து, டேங்கர் டிரைவராக வேலை கொடுத்தது. அங்கு பணிபுரியும் போது, ​​கஞ்சிரப்பள்ளியைச் சேர்ந்த மற்றொரு டிரைவரான ஹான்சனை தலிஷா சந்தித்தார், அது காதலாக மாறியது. காதலை பெற்றோரிடம் கூறிவிட்டு அவர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்ய உள்ளனர்.இவர்களுக்கு உள்ளூர் தேவாலயத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் திருமணத்திற்காக  தலிஷா.. பிரத்யேகமாக அலங்காரத்தில்  டேங்கர் ஓட்டியபடியே .. தேவாலயத்துக்கு வந்தார். அப்போது தலிஷாவுடன் கணவர் ஹன்சனும் லாரியில் இருந்தார்.  மணமக்கள் இருவரும் இப்படி லாரியில் வருவதைப் பார்த்து அனைவரும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர். இந்நிகழ்வு சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web