சென்னையில் பொதுமக்களின் வசதிக்காக நள்ளிரவு வரை மெட்ரோ ரயில்கள் இயங்கும்!

 
இன்று இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் சேவை!

சென்னையில் பொதுமக்களின் வசதிக்காக பொங்கல் பண்டிகைக்கு ஷாப்பிங் மற்றும் சொந்த ஊருக்குச் செல்வதற்கு ஏதுவாக நள்ளிரவு வரையில் மெட்ரோ ரயில்கள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை தினங்களாக வருவதால் வெளியூர்களில் பணி காரணமாக தங்கி இருப்பவர்கள் சொந்த ஊர் செல்ல தயாராகி வருகின்றனர்.  இவர்களின் தேவைகள் மற்றும் வசதிக்காக இன்று முதலே சிறப்பு  பேருந்து மற்றும் ரயில்கள் மூலம் ஊருக்கு செல்ல முன்பதிவு செய்துள்ளனர். தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலிருந்து 16000க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளும், தென் மாவட்டங்களுக்கு  சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளன.

மெட்ரோ ரயில் நிலையங்களில் மினி பஸ் சேவை: மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

லட்சக்கணக்கானோர்  இந்த சிறப்பு பேருந்து மற்றும் ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர். இவை தவிர கடைசி நேர பரபரப்பில் சிலர் கிடைத்த பேருந்து மற்றும் ரயில் சேவைகளை பயன்படுத்தி ஊருக்கு செல்ல முயற்சி செய்வர்.

மெட்ரோ ரயில்

அவர்களுக்கு ஏற்றதாகவும், பொங்கல் விடுமுறை முடிந்து ஊர் திரும்பும் மக்களுக்கு வசதியாகவும் சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .இதன் படி இன்று ஜனவரி 13 மற்றும் 14 தேதிகளில் நள்ளிரவு 12 மணி வரை  மெட்ரோ ரயில்கள் இயங்கும். அதே போல் ஊருக்கு சென்றவர்கள் மறுபடியும் சென்னை திரும்புபவர்கள் வசதிக்காக ஜனவரி 18ஆம் தேதியில் அதிகாலை 4 மணி முதலே  மெட்ரோ சேவை தொடங்கும் எனவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web