பால், தயிர் விலை மீண்டும் உயர்வு! இல்லத்தரசிகளுக்கு அடுத்த அதிர்ச்சி!

 
பால்

இல்லத்தரசிகளுக்கு அடுத்த அதிர்ச்சியாக நந்தினி பிராண்ட் பால், தயிர் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளது. சமையல் எண்ணெய் விலையில் தொடர்ந்து பருப்பு, காய்கறிகள், கேஸ் சிலிண்டர் என அடுத்தடுத்து விலை உயர்த்தப்பட்டு வந்த நிலையில், தற்போது தயிர், பால் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளது இல்லத்தரசிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.  இதன் தொடர்ச்சியாக பிற தனியார் பால் நிறுவனங்களும் விலையை உயர்த்தும் என்று அஞ்சப்படுகிறது. சமீபத்தில் அமுல் நிறுவனம் அதன் தயாரிப்புகளின் விலையை இரு முறைகளாக அடுத்தடுத்து உயர்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் பால் உற்பத்தியாளர்கள் கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரி அரசின் ஆவின் நிறுவனத்திடம் தொடர்ந்து முறையிட்டு வந்தனர். இதன் அடிப்படையில் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டது. அதே நேரத்தில் பால் விற்பனை விலையும் உயர்த்தப்பட்டது. இதனால் நடுத்தர ஏழை மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர். தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகாவிலும் பால், தயிர் விலை  உயர்த்தியுள்ளதாக கர்நாடக பால் வணிகர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

பால்
அதன்படி கர்நாடகாவில் நந்தினி பிராண்ட் பால், தயிர்   விலையை ரூ 2  உயர்த்தப்பட்டுள்ளது. இந்த  புதிய விலை உயர்வு உடனடியாக இன்று முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  சிறப்பு பால், சுபம், சம்ருத்தி, சந்துருத்தி, தயிர் உட்பட 9  பால் வகைகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

அமுல் பால்

டபுள் டோன்ட் பால் ரூ.38, டோன்டு பால் ரூ.39, ஹோமோஜெனைஸ்டு டோன்ட் பால் ரூ.40, ஸ்பெஷல் பால் ரூ.45, ஷுபம் ரூ.45, சம்ருத்தி ரூ.50, சந்துருத்தி ரூ.52. நந்தினி தயிர் 47 ரூபாயாக  உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web