அமைச்சர் ரோஜா குத்துச்சண்டை!! கைத்தட்டி மாணவர்கள் ஆரவாரம்!!

 
ரோஜா

ஆந்திரா விஜயவாடாவில் அமைந்துள்ள உடா சிறுவர் பூங்காவில் 12வது தேசிய மினி ரோல் பால் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில் ஆண்கள் பிரிவில் ராஜஸ்தான் அணியும், பெண்கள் பிரிவில் ஒடிசாவும் வெற்றி பெற்றிருந்தன.  வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.  

ரோஜா

இந்த வெற்றி விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர்  ரோஜா கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.  இதில் உரையாற்றிய நடிகையும், எம்பியுமான ரோஜா  11 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகளை  விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.இந்தியா முழுவதும்  19 மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.  மாணவர்கள் படிப்புடன் விளையாட்டிலும் சிறந்து விளங்கி சிகரத்தை தொட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். 

ரோஜா அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி
அமைச்சர்  ரோஜா அங்கிருந்த பெண்களுடன் குத்துச்சண்டை விளையாடினார். இதனால்  மாணவர்கள் உற்சாகம் அடைந்து சந்தோஷ குரல் எழுப்பி  ஆரவாரம் செய்தனர்.  இதே போல் நவம்பரில்  ஜெகன்மோகன் ரெட்டி பிறந்தநாள் விழாவில் அமைச்சர்  ரோஜா கலைக்குழு பெண்களுடன் மேடையில் நடனமாடி உற்சாகப்படுத்தினார் என்பது  குறிப்பிடத்தக்கது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web