மோடியின் சகோதரர் கார் விபத்து!! பெரும் பரபரப்பு!!

 
மோடி

இந்திய பிரதமர் மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி. இவர் கர்நாடக மாநிலம் மைசூரில் வசித்து வருகிறார். இவரது  குடும்பத்துடன் காரில் சென்ற போது அந்த கார் திடீரென விபத்துக்குள்ளானது. இதில் மோடியின் சகோதரர் காயமடைந்தார். 

விபத்து
கர்நாடக மாநிலம், மைசூர் மாவட்டத்தில் உள்ள பந்திபுரா பகுதியில் தனது குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருந்த போது  கார் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் பிரஹலாத் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு லேசான காயம் ஏற்பட்டது.தற்போது பிரஹலாத் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

போலீஸ்
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற  காவல்துறையினர் விபத்துக்குள்ளான காரை மீட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர். மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி சாலை விபத்தில் சிக்கி காயம் அடைந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும்  ஏற்படுத்தியுள்ளது. 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!