மோடியின் தாயார் கவலைக்கிடம்!! பரபரக்கும் பிரதமர் அலுவலகம்!!

 
மோடியின் தாயார்

நேற்று டிசம்பர் 27ம் தேதி பிரதமர் மோடியின் சகோதரர் கார் விபத்தில் சிக்கினார். இதில் அவருடைய  குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று மோடியின் தாயார் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மோடியின் தாயார்
நேற்றையதினம்  மோடியின் சகோதரர்  பிரகலாத் மோடி மற்றும் அவரது குடும்பத்தினருடன்  காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அவர்களின் கார் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் மோடியின் சகோதரர்  பிரகலாத், அவரது மகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தை ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மோடியின் தாயார்
இந்நிலையில் இன்று பிரதமர் மோடியின் தாயார் உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் பிரதமர் மோடியின்  தாயாருக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவரது உடல்நிலையை மருத்துவ வல்லுனர்கள் குழு தொடர்ந்து 24 மணி நேரமும் கண்காணித்து வருவதாகவும்  தெரிவித்துள்ளது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web