சுஜித்குமார் ஐ.பி.எஸ்., தலைமையில் திருச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்!

 
திருச்சி சுஜித்குமார்

திருச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில், 2023 வருடத்திற்கான மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. நீதித்துறை, மருத்துவத் துறை, சிறைத் துறை, தீயணைப்பு துறை,  சமூக நலத்துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் இந்த மாதாந்திர கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

காவல்துறை கலந்துறை கூட்டம்

குற்ற வழக்குகளில் தண்டனை பெற்று தருவது, வழக்குகளை திறம்பட கையாளுவது, குற்றவாளிகளைச் கைது செய்வது, நிலுவையில் உள்ள மருத்துவத் துறை தொடர்பான ஆவணங்களை உடன் பெறுவது, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உடனடி நடவடிக்கை எடுப்பது, கஞ்சா மற்றும் போதை வழக்குகளில் குற்றவாளிகளை பிணையில் வர முடியாத சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய வேண்டியது, பொங்கல் விழா தொடர்பான பொதுமக்களின் பாதுகாப்பு உட்பட அனைத்து விஷயங்களும் இந்த கூட்டத்தில் கலந்தாய்வு செய்யப்பட்டது. திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு சுஜித் குமார் ஐ.பி.எஸ்., அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார்கள்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web