பிரசவத்தில் தாயும், சேயும் உயிரிழப்பு!! உறவினர்கள் முற்றுகை போராட்டம்!!

 
ஆரம்ப சுகாதார நிலையம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வ.புதுபட்டி கிராமத்தில் வசித்து வருபவர் ராம்குமார். இவரது மனைவி 19 வயது  அரங்கநாயகி  நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று இரவு  அவர், பிரசவத்திற்காக வ.புதுபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்  அனுமதிக்கப்பட்டார். 

ஆரம்ப சுகாதார நிலையம்

அங்கு அவருக்கு இன்று அதிகாலை 5 மணிக்கு பெண் குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தை சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.   மேலும் அரங்கநாயகியின் உடல்நிலை மிகவும் மோசமானது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சு மூலம் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவரும் உயிரிழந்தார். 

பிறந்த குழந்தை மற்றும் தாய் அடுத்தடுத்து இறந்ததால் அவர்களது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் தாய் மற்றும் குழந்தையின் உடலை பார்த்து கதறி அழுதனர். ஆரம்ப சுகாதார நிலையத்தில் தவறான சிகிச்சையால் தாய் மற்றும் குழந்தை இறந்ததாக கூறி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Srivilliputhur

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவம் குறித்து உயிரிழந்த பெண்ணின் உறவினர் தெரிவிக்கையில் மருத்துவர் வராத காரணத்தினால் அங்கிருந்த செவிலியர் மட்டுமே அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார். இதனால்  தான் குழந்தை உயிர் இழந்தது. அத்துடன் இச்சம்பவம் குறித்து  காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பெயரில் விரைந்து வந்த காவல் துறையினர் அந்த பெண்ணின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அந்த பேச்சுவார்த்தையில் நடைபெற்ற  இச்சம்பவம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்  காவல்துறையினரும் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக  உறுதி அளித்தனர். இதனையடுத்து உறவினர்கள் கலைந்து சென்றனர். தாயும், சேயும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும்,  சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வ. புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதலாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமிக்க வேண்டும் எனவும் அப்போது தான் அங்கிருக்கும் மக்களின் உயிருக்கு உத்தரவாதம் எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர். 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web