வாகன ஓட்டிகளே குறிச்சிக்கோங்க!! நாளை சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்!!

 
போக்குவரத்து மாற்றம்

நாளை காணும் பொங்கல் தினத்தை ஒட்டி மக்கள் சென்னை மக்கள் பீச், பார்க், ஷாப்பிங் மால்களில் கூடி  கொண்டாடி மகிழ்வர். இதன் அடிப்படையில் சென்னையின் முக்கிய பகுதிகளில் நாளை ஜனவரி 17ம் தேதி ஒரு நாள் மட்டும்  போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்து காவல்துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்  நாளை ஜனவரி 17ம் தேதி  காணும் பொங்கல் கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னையில் அனைத்து சாலைகளிலும்,  பொதுமக்கள் கூடுவர் என  எதிர்பார்க்கப்படுகிறது. எனவே சூழ்நிலைக்கு ஏற்றபடி போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

போக்குவரத்து மாற்றம்


அதன்படி  காமராஜர் சாலையில் பொதுமக்கள் எண்ணிக்கை சாலையில் அதிகமாகும் வரையில் எந்தவித போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட மாட்டாது. அதே நேரத்தில் எண்ணிக்கை அதிகமாகும் பட்சத்தில் உழைப்பாளர் சிலை மற்றும் கண்ணகி சிலைக்கு  வடக்கில் இருந்து வரும் வாகனங்கள் பாரிமுனை முத்துசாமி பாயின்ட், வாலாஜா பாயின்ட், அண்ணாசாலை பெரியார் சிலை, அண்ணாசிலை, வெல்லிங்டன் பாயின்ட், ஸ்பென்சர் சந்திப்பு, பட்டுளாஸ் சாலை, மணிக்கூண்டு, ஜி.ஆர்.எச்.பாயின்ட் வழியாக டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக திருப்பி விடப்படும். 

போக்குவரத்து மாற்றம்
அடையாறில் இருந்து வரும் வாகனங்கள் கண்ணகி சிலையில் திருப்பி விடப்பட்டு பாரதி சாலை, பெல்ஸ் சாலை, வாலாஜா சாலை வழியாக அண்ணாசாலை வழியாக செல்லலாம். 
பாரதி சாலையானது கண்ணகி சிலையில் இருந்து ஒருவழி பாதையாக மாற்றப்படும். 
வாலாஜா சாலையில் இருந்து பெல்ஸ் சாலைக்கு வாகனங்கள் செல்வதற்கு தடை . 
பாரதி சாலையில் இருந்து பெல்ஸ் சாலை நோக்கி செல்ல  அனுமதி .
பாரதி சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலைக்கு வாகனங்கள் செல்ல தடை .


வாலாஜா சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலை வழியாக  வாகனங்கள் செல்ல அனுமதி .
இது தவிர சூழ்நிலைக்கு ஏற்றபடி சென்னை போக்குவரத்து போலீசார் செய்யும் மாற்றங்கள் அனைத்தும் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கு ஒரு முறை கூகுள் வரைபடத்தில் RoadEase app மூலம் தகவல்கள் பரிமாற்றம் செய்யப்படும். இதனை பயன்படுத்தி  'கூகுள் மேப்'  வழியாக  மாற்று பாதைகளை கண்காணித்து செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web