வழி தெரியாமல் திணறும் வாகன ஓட்டிகள்!! தமிழகம் முழுவதும் தொடரும் பனிமூட்டம்!!

 
பனிமூட்டம்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மழையின் தாக்கம் குறைந்து அதிகாலையில்  நடுக்கும் குளிர் ஏற்பட்டு வருகிறது  பகல் பொழுதுகளில் வறண்ட வானிலையே நிலவி வருகிறது. அதிலும் தமிழகம் முழுவதும் வெயில் ஏறும் வரை  பனிமூட்டம் அதிகமாகவே உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை குறைவாக இருக்கும் எனவும்,மற்றமாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

பனிமூட்டம்

அதே நேரத்தில் பனிமூட்டம் அதிகமாக இருக்கவேண்டும். வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது எனவும் தெரிவித்திருந்தது. அதே நேரத்தில் ஊட்டியில் உறைபனி காரணமாக பனி போர்த்திய புல்வெளிகள்,  வீட்டை விட்டும் வெளியில் வரமுடியாத அளவு 0 டிகிரி செல்சியசாக வானிலை நிலவுகிறது.இதனால் அங்கு வாகனங்களில் பெட்ரோல், டீசல் உறைந்து விடுவதால் அங்கும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

பனிமூட்டம்

அடுத்து வரும் சில நாட்களும் இதே நிலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக  தலைநகரான சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன்  காணப்படும்.  அதிகபட்ச வெப்பநிலையாக  30 டிகிரி செல்சியசும்,  குறைந்தபட்ச வெப்பநிலையாக  21 டிகிரி செல்சியசும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web