பிரம்மாண்டமாக நடைபெற்ற முகேஷ் அம்பானி நிச்சயதார்த்தம்!! பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்பு!!

 
ஆனந்த் அம்பானி

இந்தியாவின் முண்ணனி தொழிலதிபர்களில் ஒருவர் அம்பானி. முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கு பாரம்பரிய முறைப்படி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது . ஆனந்த் அம்பானி தனது சிறுவயது தோழியான  ராதிகா மெர்ச்சண்ட்டை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இதற்கான நிச்சயார்த்தம் மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும்   ராஜஸ்தானில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோவிலில் நிச்சயதார்த்த விழா நடைபெற்றது.

ஆனந்த் அம்பானி
இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நடிகர்கள் ஷாருக்கான், ரன்பீர் கபூர் - அலியா பட், ஜான்வி கபூர், ரன்வீர் சிங் உட்பட பல பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.  நியூயார்க்கில் தனது படிப்பை முடித்த ராதிகா, 2017ம் ஆண்டு மும்பையில் தனியார் நிறுவனம் ஒன்றில் சிறிது காலம் வேலை செய்தார்.

ஆனந்த் அம்பானி

இப்போது தனது தந்தையின் என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தில் இயக்குனராக செயல்பட்டு வருகிறார். திருமணத் தேதி குறித்த அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால் ஆனந்த் அம்பானிதான் தற்போது முகேஷ் அம்பானியின் எரிசக்தி தொடர்பான அனைத்து தொழில்களையும் கவனித்து வருகிறார். அம்பானியின் மகள் ஈஷா அம்பானிக்கு சமீபத்தில்தான் அமெரிக்காவில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த விழாவில் கலந்து கொள்ள கடந்த சில நாட்களுக்கு முன்புதான் இந்தியா திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web