மல்டி பேக்கர் : இந்த ஸ்மால் கேப் பங்கு டிவிடெண்ட் எவ்வளவு தெரியுமா? கேட்டா அசந்து போயிடுவிங்க!

 
ரூபாய்

வெல்ஸ்பன் (Welspun) குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான Welspun Enterprises இந்த வார வர்த்தக அமர்வின் போது கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது, ஏனெனில் நிறுவனத்தின் பங்குகள் ஒரு பங்குக்கு ரூபாய் 7.5 சிறப்பு ஈவுத் தொகைக்கான பதிவு தேதிக்கு முன்னதாக எக்ஸ்-டிவிடெண்டாக மாறும். இந்த ஸ்மால்-கேப் பங்கு, ஒன்பது மாதங்களில் அதன் 52 வாரக் குறைந்த அளவிலிருந்து 139%க்கும் அதிகமான லாபத்துடன் மல்டி-பேக்கராக உருவெடுத்துள்ளது.

ஒழுங்குமுறைத்தாக்கல் படி, டிசம்பர் 30ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், நிதியாண்டிற்கு 75% வீதம் ஒவ்வொன்றும் ரூபாய் 10 முகமதிப்பு கொண்ட ஒரு ஈக்விட்டி பங்கிற்கு ரூபாய் 7.50 ஒரு முறை சிறப்பு ஈவுத்தொகையாக வழங்க நிறுவனத்தின் வாரியம் ஒப்புதல் அளித்தது. 

 வெல்ஸ்பன் ஷேர்

2022-23 சிறப்பு ஈவுத்தொகைக்கு தகுதியான பங்குதாரர்களைத் தீர்மானிக்க ஜனவரி 11 ஐ பதிவுத்தேதியாக நிறுவனம் நிர்ணயித்தது. ஈக்விட்டி பங்குகளில் நிறுவனத்தின் செட்டில்மென்ட் வகை 'T+1' என்பதால், எக்ஸ்-டிவிடென்ட் தேதியும் பதிவு தேதியும் ஒன்றுதான் என்பதாக இருக்கிறது. நிறுவனத்தின் ஈக்விட்டி பங்குகளை வைத்திருக்கும் பங்குதாரர்களுக்கு ஜனவரி 11ம் தேதி பதிவு தேதியில் ஈவுத்தொகை வழங்கப்படும். சிறப்பு ஈவுத்தொகை ஜனவரி 20, 2023 அன்று அல்லது அதற்குப் பிறகு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஒருமுறை சிறப்பு ஈவுத்தொகையானது FY22 மற்றும் FY21ல் ஒவ்வொன்றும் செலுத்தப்பட்ட ஈக்விட்டி பங்கு ஒன்றுக்கு ரூபாய் 1.50 ஈவுத்தொகையிலிருந்து பல மடங்கு அதிகமாகும். நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் ரூபாய் 2,409 கோடியாக இருக்கிறது. 52 வாரங்களில் அதிகபட்சமாக ரூபாய் .174.80 என்ற விலையில் இருந்தது. மேலும், நிறுவனம் ரூபாய் 10 முக மதிப்பில் 1,17,50,000 ஈக்விட்டி பங்குகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. திரும்பப் பெறுவதற்கான பதிவு தேதி தீர்மானிக்கப்பட்டு அதனை தனித்தனியாக தெரிவிக்கப்படும் எனவும் தெரிகிறது.

 வெல்ஸ்பன் நூற்பாலை தொழிற்சாலை ஆலை ஷேர்

திங்கட்கிழமை வர்த்தகத்தில் BSEல் 2.72 சதவிகிதம் குறைந்து ரூபாய் 160.65க்கு வர்த்தகமானது.NSEல் 2.42 சதவிகிதம் குறைந்து ரூபாய் 161.00க்கு வர்த்தகத்தை நிறைவு செய்தது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web