ஆறே மாதங்களில் மல்டிபேக்கர்!! உன்மேல ஒரு கண்ணு தில்லாலங்கடியோ!! அப்பர் சர்க்யூட்டில் வர்த்தகம் !

 
தங்கம்


நேற்று பிஎஸ்இ-யில் அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களில் ஒன்றான ஸ்கை கோல்ட் லிமிடெட் பங்குகள் 20 சதவீத அப்பர் சர்க்யூட்டில் லாக் செய்யப்பட்ட பிறகு, ஒரு பங்கின் விலை உயர்ந்து 299 ரூபாயை  எட்டியது. இந்நிறுவனப் பங்குகளின் விலை சமீபகாலமாக உயர்ந்து, மீண்டும் 52 வார உச்சத்தை எட்டியது. நிறுவனம் அதன் அரையாண்டு மற்றும் வருடாந்திர நிதிநிலை அறிக்கைகளில் நேர்மறையான முடிவுகளை அறிவித்தது. 2021 நிதியாண்டில், நிகர லாபம் ரூபாய் 4.81 கோடியாக இருந்தது, ஆனால் 251.67 சதவீதம் அதிகரித்து, நிதியாண்டில் ரூபாய் 16.92 கோடியாக இருந்தது.

தங்கம்


ஸ்கை கோல்ட் லிமிடெட் தங்க நகைகளை வடிவமைத்தல், உற்பத்தி செய்தல் மற்றும் சந்தைப்படுத்துதல் போன்ற தொழிலில் ஈடுபட்டுள்ளது. நிறுவனம் B2B மாதிரியைப் பின்பற்றுகிறது, அங்கு தயாரிப்புகள் முக்கியமாக நடுத்தர அளவிலான நகைக்கடைகள் மற்றும் கடைகளுக்கு விற்கப்படுகின்றன, அவை ஆன்லைன் தளங்கள் மற்றும் சில்லறை விற்பனை கடைகள் மூலம் விற்கப்படுகின்றன. இன்று, தற்பொழுதைய நிலவரப்படி ஸ்கை கோல்டின் பங்குகள் பிஎஸ்இயில் 10.04 சதவிக்டிஅஹ்ம் உயர்ந்து ரூபாய் 299.65க்கு வர்த்தகமாகிறது.
ஸ்கை கோல்ட் லிமிடெட் 292.56 கோடி சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது.

தங்கம்

பங்குகளின் PE பன்மடங்கு 14.41 ஆகும், இது துறைசார்ந்த PE மடங்குகளான 68.84 மற்றும் ROE முறையே 27.86 சதவீதம் ஆகும். இந்த பங்கு 6 மாதங்கள் மற்றும் 1 ஆண்டு காலத்தில் முறையே 153.20 சதவீதம் மற்றும் 172.30 சதவீதம் மல்டிபேக்கர் வருமானத்தை அளித்துள்ளது. 52 வார குறைந்தபட்ச விலையாக BSEல் ரூபாய் 90 ஆகவும், அதிகபட்ச விலையாக ரூபாய் 305ஆகவும் இருந்தது, அதே போல  NSEல் இந்தாண்டு ஜனவரி 6ம் தேதி 221.55 பைசாவில் இருந்து இன்று 9.60 சதவிகிதம் உயர்ந்து 299.05க்கு வர்த்தகமாகி வருகிறது. முதலீட்டாளர்கள் இந்தப் பங்கின் மீது ஒரு கண் வைத்திருக்க வேண்டும் என்கிறார்கள் சந்தை நிபுணர்கள்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web