அரசுப் பள்ளிகளில் ”நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்”!! முதல்வர் தொடங்கி வைப்பு!!

 
நம்ம ஸ்கூல்

தமிழகத்தில்  அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு இணையாக கொண்டு வர பல்வேறு திட்டங்களையும் செயல்பாடுகளையும் தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று நம்ம ஸ்கூல் பவுண்டேசன்  எனும் புதிய திட்டத்தை  முதல்வர்  முக ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தின் மூலம் அரசுப்பள்ளிகளில் படித்து உயர்நிலையை எட்டியவர்கள் தங்கள் பள்ளிகளை தத்தெடுத்து நிதியுதவி, பொருளுதவி செய்யலாம்.

நம்ம ஸ்கூல்

இதற்காக பிரத்யேக இணையதளம் தொடங்கப்படும். இதன் மூலம் தமிழகத்தின் எந்த மூலையிலிருக்கும் பள்ளிக்கும் நிதி உதவி செய்ய முடியும். இந்த நிதியில் பள்ளிகளில் கூடுதல் கட்டிடங்கள்,  ஆய்வகங்கள் மற்றும் நூலகங்கள்  , கழிப்பறைகள் , வகுப்பறைகள், பள்ளி சான்றுகளை வைக்க பொருட்கள், விளையாட்டு பொருட்கள், மாணவர்களுக்கு தேவையான் உபகரணங்கள் என எதையும்  செய்யலாம்.  மேலும் இன்று முதல் தமிழகத்தில்  கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

 அத்துடன் அரசு பள்ளிகளில் படித்து வரும்  6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து வரும்  மாணவிகளுக்கு மாதம் ரூ1000 உதவித்தொகை வழங்கப்படும்.அவர்கள் இளங்கலை படிப்பு படித்து முடிக்கும் வரை இந்த தொகை  தொடர்ந்து  நேரடியாக அவர்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும். அரசு பள்ளி மாணவ, மாணவிகள் மட்டும் கலந்துகொள்ளும் வகையில் 'கலைத் திருவிழா' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.  

ஸ்டாலின்

நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டத்தின் படி ஒவ்வொரு பள்ளியில் படித்து தற்போது நல்ல நிலையில் இருப்பவர்கள் தாங்கள் படித்த பள்ளிக்கு  சேவை செய்ய வேண்டும். அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் தங்கள் பள்ளியை முன்னேற்ற உதவி செய்ய வேண்டும். இதற்கான முன்னெடுப்பு தான்  'நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்' .  இந்த நிதியுதவியின் மூலம் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டுதல், சுற்றுசுவர் அமைத்தல், விளையாட்டு சாதனங்கள் வாங்குதல், தேவையான பொருட்களை வாங்குதல், புனரமைப்பு பணிகளை செய்தல் போன்ற திட்டங்களை நிறைவேற்ற முடியும் எனத் தெரிவித்துள்ளார். 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web