மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா நாசல் தடுப்பூசி!! முன்பதிவு தொடக்கம்!!

 
நாசல் தடுப்பூசி

சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா ஜெட் வேகத்தில் பரவத் தொடங்கியுள்ளது. இதனையடுத்து உலகின் மற்ற நாடுகள் பாதுகாப்பு, தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளன அந்த வகையில் இந்தியாவிலும் பிரதமர் அவசர ஆலோசனைக் கூட்டத்தினை கூட்டினார். இதன் பிறகு பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நாளை முதல் சர்வதேச விமான நிலையங்களில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம்.

நாசல் தடுப்பூசி

பொது இடங்களில் முகக்கவசம், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். இது குறித்த அறிவுறுத்தலை மாநில அரசுகளுக்கு அனுப்பி வைத்திருப்பதாக தெரிவித்திருந்தார். மேலும் இதுவரை பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்தாதவர்கள் தற்போது செலுத்திக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.  அதன் ஒரு பகுதியாக உலகிலேயே முதல் நாசல் கொரோனாவகை தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த தயாரிப்பிற்கு மத்தியஅரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.  புதிய வகை கொரோனா வைரஸ் உலக நாடுகளில் மீண்டும் பரவி வரும் நிலையில்,  மூக்கு வழியாக செலுத்தப்படும் நாசல் தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.


கடந்த முறை கொரோனா பரவலின் போது இந்தியஅரசின் பாரத் பயோடெக் மற்றும் சீரம் நிறுவனத்தின் தடுப்பூசிகளுடன் , வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சில தடுப்பூசிகளும் போடப்பட்டன. இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று பரவலை  தடுக்கும் வகையில், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள இன்கோவாக் எனப்படும் மூக்கு வழியாக செலுத்தப்படும் பூஸ்டர் தடுப்பு மருந்துக்கு மத்தியஅரசு அவசர கால அனுமதி அளித்துள்ளது. மூக்கு வழியாக செலுத்தப்படும் மருந்து இன்று முதல் கொரோனா தடுப்பூசி திட்டத்தில் சேர்க்கப்படும் எனவும்,  இந்த தடுப்புமருந்து முதலில் தனியார் மருத்துவமனைகளில் மட்டும் கிடைக்கும் எனவும்  மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தடுப்பூசி
புதிய வகை கொரோனா பரவலை தடுக்க மீண்டும் ஊரடங்கு தேவைப்படாது என  மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் தடுப்பூசி எடுக்காதவர்களே பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்புக்கள் அதிகம், ஏற்கனவே  தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் பயப்படத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் இதுவரை எந்த ஒரு நாடும் மூக்குவழி செலுத்தும் கொரோனா மருந்தை தயாரிக்காத நிலையில், இந்தியஅரசு நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவனம் முதன்முதலாக கண்டுபிடித்து சாதனை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்துள்ளன. 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web