நெறைஞ்ச அமாவாசை.. நல்ல நேரம்... சகுனம் பார்த்து பெரியார் மண்ணில் பிரச்சாரத்தைத் துவங்கியது திமுக!

 
திமுக

அட பகுத்தறிவு எல்லாம் பொதுமக்களுக்கு தாங்க.. நாங்க அப்படி எல்லாம் கிடையாது.. ஏன் நாங்க கோவிலுக்குப் போகாமலா இருக்கோம்? என்று எதிர்கேள்வி கேட்பார்கள் போல. பெரியார் தான் எங்கள் முதல் தலைவர் என்று இன்று வரையில் பெரியார் படத்தையும் கட்சி கூட்டங்களில் பயன்படுத்தி வருகிறார்கள் திமுகவினர். இந்நிலையில், நேற்று நெறைஞ்ச தை அமாவாசை, நல்ல நேரம், சகுனங்களை எல்லாம் பார்த்து பிரச்சாரத்தை ஈரோடு தொகுதியில் ஆரம்பித்தனர் திமுகவினர்.

ஈரோடு கிழக்கு தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் யார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாதா என தொண்டர்களும், தலைவர்களும் காத்திருக்கின்றனர்.

திமுக

இந்நிலையில் திமு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் மதசார்பற்ற திமுக கூட்டணி கட்சியின் சார்பாக காங்கிரஸின் கை சின்னத்திற்கு மாண்புமிகு உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என் நேருவும்  தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி அவர்களும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் மாநில மாவட்ட மாநகர, பகுதி, வட்ட கழக, நிர்வாகிகளுடன் நேற்று பெரியார் நகர் பகுதியில் (45வது வார்டில்) வாக்கு சேகரிக்க வந்தனர்.

திமுக
இந்நிலையில் நேற்று காலையில் அதிமுக சார்பாக பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஓ.பி.எஸ் அதிமுக போட்டியிடும் என்றும் பாஜக வேட்பாளர் ஆதரவு கேட்டால் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சி கண்டிப்பாக தனித்தே போட்டியிடும் என தெரிவித்துள்ளது. 

அது சரி.. அவ்வளவு பகுத்தறிவு பேசற கட்சி, பெரியார்  மண்ணுல நிற்கும் போதாவது கொஞ்சம் சுய அறிவோட இருக்கலாம். இங்கேயும், ராகு காலம், நல்ல நேரம், நாள் கிழமைப் பார்த்து பிரச்சாரத்தை துவங்கணும்னா.. இதுக்கு ஏன்ய்யா மக்களை முட்டாளாக்குறீங்க.. என்று பெரியார் அபிமானி ஒருத்தர் புலம்பிக் கொண்டே சென்றது காதில் விழுந்த்து. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web