இந்தியா முழுவதும் இன்று முதல் புது உத்தரவு! சர்வதேச விமானப் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!

 
நாளை முதல் மதுரை துபாய் விமான சேவை!

இன்று முதல் இந்தியா முழுவதும் கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக புது உத்தரவு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இந்தியாவின் அனைத்து சர்வ தேச விமான நிலையங்களிலும் கொரோனா பாதிப்பின்மை சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த  2 வருடங்களாக உலகம் முழுவதும் கொரோனா பரவல் மிகப்பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்திவிட்டது. தற்போது தான் உலக நாடுகள் அதனால் ஏற்பட்ட பொருளாதார சரிவிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் நிலையில் சில வாரங்களாக சீனா, ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஹாங்காங் நாடுகளில் மீண்டும்  கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனையடுத்து உலகின் மற்ற நாடுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. 

விமான நிலையம்

இந்தியாவை பொறுத்தவரை கொரோனா குறித்த அச்சம் தேவையில்லை . அதே நேரத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான சமூக இடைவெளி, முகக்கவசம் இவைகளை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. அதன் ஒரு பகுதியாக சர்வதேச விமான நிலையங்களில் மீண்டும் கட்டுப்பாடுகளை அதிகப்படுத்தியுள்ளது.

அதன்படி சர்வதேச நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருகை தரும் சீனா, சிங்கப்பூர், ஹாங்காங், தென் கொரியா, தாய்லாந்து, ஜப்பான் நாட்டு பயணிகள் கொரோனா பாதிப்பின்மை சான்றிதழை வழங்க வேண்டும். அத்துடன் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் இன்று ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருப்பதாக மத்திய அரசு  அறிவித்துள்ளது.

விமான நிலையம்

பயணத்தைத் தொடங்குவதற்கு 72 மணி நேரத்துக்கு முன்பு  எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை அறிக்கையை ஏர் சுவிதா வலைதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.  குறிப்பிட்ட நாடுகளுக்கு விமானங்களை இயக்கும் நிறுவனங்களுக்கான புதிய வழிகாட்டுதல்களை மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் வழங்கியுள்ளது.  அத்துடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்ற உறுதிமொழி படிவத்தையும் பயணிகள் வழங்க வேண்டும்.  

சம்பந்தப்பட்ட நாடுகளின் பயணிகளுக்கு அனுமதி சீட்டு வழங்கும் நடைமுறையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். பயண அனுமதிச் சீட்டு வழங்கும் போது உரிய சான்றிதழைப் பயணிகள் பதிவேற்றம் செய்திருப்பதை  விமான நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இந்த சுற்றறிக்கையானது அனைத்து வர்த்தக விமான நிறுவனங்கள், விமான நிலைய நிர்வாகிகள், மாநிலங்களின் தலைமை செயலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web