அடுத்த அதிர்ச்சி!! 30 நாடுகளில் காலரா பரவல் !! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!!

 
காலரா

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா உலகம் முழுவதும் மிகப்பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்தி விட்டது. தற்போது படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் பருவநிலை மாற்றங்களால் முன்னேப்போதும் இல்லாத வகையில் காலரா பரவி வருவதாக  உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் நடப்பாண்டில் மட்டும் காலரா 30 நாடுகளில் பரவியுள்ளது.

காலரா

 காலரா தொற்று மற்றும் மரண விகிதங்கள் பல ஆண்டுகளாக பெருமளவில் குறைந்து வந்தது. ஆனால், நடப்பு ஆண்டில் காலரா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.  பருவநிலை மாற்றம் எதிரொலியாக சர்வதேச அளவில் இந்த பரவல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், ஹைதி, லெபனான், மாளவி மற்றும் சிரியா போன்ற நாடுகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.  

காலரா

பாகிஸ்தானை பொறுத்தவரை சுமார்  5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.2023ம் ஆண்டிலும் இது தொடரக்கூடும். இயற்கை பேரிடரால், வறட்சி மற்றும் மழை மற்றும் சூறாவளி, புயல்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாலும் இவை உருவாகலாம் என விளக்கம் அளித்துள்ளது .  கெட்டு போன உணவு அல்லது குடிநீராலும் காலரா பரவும் வாய்ப்புக்கள் அதிகம்.  உலகம் முழுவதும் சுமார் 40 லட்சம் பேர் காலரா பாதிப்புக்கு ஆளாகின்றனர்.  1.43 லட்சம் வரை உயிரிழப்புக்களும் பதிவாகி வருகின்றன. இதனால் சுத்தம், சுகாதாரம், பாதுகாப்பு இவைகளை தொடர்ந்து கடைப்பிடிக்கவும் சர்வதேச நாடுகளுக்கு  உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web