இல்லத்தரசிகளுக்கு அடுத்த அதிர்ச்சி!! இன்று முதல் பால், தயிர் விலை மீண்டும் உயர்வு!!

 
அமுல் பால்

ஆவின் பால் விலை உயர்வை தொடர்ந்து தனியார் பால் நிறுவனங்களும் பால் விலையை உயர்த்தின. அந்த அதிர்ச்சியில் இருந்தே இல்லத்தரசிகள் இன்னும் முழுவதுமாக மீளவில்லை . இந்நிலையில் தற்போது  மீண்டும் ளான ஹெரிடேஜ், திருமலா, ஜெர்சி மற்றும் வல்லபா, சீனிவாசா  தனியார் பால் நிறுவனங்கள் லிட்டர் ஒன்றுக்கு 2 ரூபாய் வரை விலையை உயர்த்தி உள்ளன. 

ஆவின் பால்
புதிய விலை உயர்வின் படி , இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ2 அதிகரித்து  48 ரூபாயிலிருந்து 50 ரூபாய் ஆகவும், சமன்படுத்தப்பட்ட பால்  ரூ 2 அதிகரித்து  லிட்டர் ஒன்றுக்கு 50 ரூபாய் இருந்து 52 ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல் நிலைப்படுத்தப்பட்ட பால்   ரூ 2 அதிகரித்து  62 இலிருந்து 64 ரூபாயாகவும், நிறைகொழுப்பு பால் ரூ 2 அதிகரித்து 70 ரூபாயிலிருந்து 72 ரூபாய் ஆகவும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தயிர் விலையும் லிட்டருக்கு ரூ 72 ரூபாயிலிருந்து 74 ரூபாயாகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வரும் என தகவல்கள் வெளியான நிலையில் இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

பால்
தமிழக அரசு சார்பில் ஆவின் பால் , பால் பொருட்கள் தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு பால் உற்பத்தியாளர்கள் கொள்முதல் விலையை உயர்த்த கோரி கோரிக்கை விடுத்தனர். இதன் சார்பில் கொள்முதல் விலையை உயர்த்திய தமிழக அரசு பால் விலையையும் உயர்த்தியது. தனியார் பால் பாக்கெட்டுகளை காட்டிலும் ஆவின் பால் விலை குறைவு என்பதால் மக்களிடையே ஆவினுக்கு தான் எப்போதுமே மவுசு அதிகம். ஆனால் இந்த விலை உயர்வு மக்களிடையே அதிருப்தியை உருவாக்கியது. இதனையடுத்து தனியார் பால் விலைகளும் உயர்த்தப்பட்டன. இதன்படி  கடந்த ஆண்டு மட்டும்  4 முறை தனியார் பால் விலை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web