அதுக்கு வாய்ப்பில்ல ராஜா!! பொங்கல் ரொக்கப்பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்த முடியாது!! அமைச்சர் திட்டவட்டம்!!

 
பெரிய கருப்பன்

தமிழர் பண்டிகையாம் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும்  வேஷ்டி, சேலை, பொங்கல் சிறப்பு தொகுப்பு, ரொக்கப்பணம் இவைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டிலும்  பொங்கல் சிறப்பு தொகுப்பு, கரும்பு, வேஷ்டி ,சேலை , ரொக்கப்பணம் ரூ1000 வழங்கப்பட உள்ளது.  இதன் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள 2.19 கோடி ரேஷன் அட்டை தாரர்கள் பயனடைவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசத்தல்!! மக்களே பொங்கல் சிறப்பு தொகுப்பை பெற தயாராகிட்டீங்களா? தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!!

அத்துடன் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 19,269 குடும்பங்களுக்கு இந்த தொகுப்பு கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.  இதன்படி ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் ரூ1000 ரொக்கப்பணம் , ஒரு கிலோ பச்சரிசி , ஒரு கிலோ சர்க்கரை  முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும். இதில் ரொக்கப்பணத்தை தமிழக அரசு வங்கிக் கணக்கில் செலுத்த வாய்ப்பிருக்கிறதா என மதுரை உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கு சிவகங்கையில் பதில் அளித்து பேசிய  கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன்,  பொங்கல் சிறப்பு தொகுப்பும் திட்டமிட்ட படி வழங்கப்படும். பரிசு தொகையை குடும்பத்தை வங்கி கணக்கில் செலுத்த வாய்ப்பில்லை . ரேஷன் கடைகளிலேயே பெற்றுக் கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

பொங்கல்

கரும்புகள் தமிழக விவசாயிகளிடம் இருந்து மட்டுமே கொள்முதல் செய்யப்பட உள்ளன.  குறுகிய காலமே இருப்பதால் ரொக்கப்பணத்தை வங்கிகளில் செலுத்த கால அவகாசம் கிடையாது. இதனால் நடப்பாண்டில் பொதுமக்கள் ரேஷன் கடைகளிலேயே பெற்றுக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். நேற்று முதல் வீடு வீடாக டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த டோக்கன்களின் படி பொங்கல் சிறப்பு தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம். ஜனவரி 9ம் தேதி  இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அன்றைய தினமே தமிழகம் முழுவதும் இந்த தொகுப்புக்களை நேரடியாக ரேஷன் கடைகளிலேயே பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web