இன்னைக்கு லீவெல்லாம் கிடையாது!! ஸ்கூலுக்கு கிளம்புங்க!! அமைச்சர் அதிரடி உத்தரவு!

 
அன்பில் மகேஷ்

பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் வழக்கம் போல் தொடங்க உள்ளன. இடையில் இன்று ஜனவரி 18ம் தேதி தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. மாணவர்கள் அனைவரும் உற்சாகம் அடைந்தனர். சுற்றுலா சென்றவர்கள் மேலும் ஒரு நாள் பயணத்தை நீட்டிப்பது குறித்து ஆலோசிக்க தொடங்கினார்.

அன்பில் மகேஷ் மாணவர்கள்

ஆனால் நேற்று முன் தினம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சர்வதேச புத்தக கண்காட்சியில்  இது குறித்து செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில்  பொங்கல் பண்டிகைக்கு தமிழகத்தில் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை தினங்களாக இருப்பதால், பலரும் சொந்த ஊர்களுக்குப் பொங்கல் கொண்டாட குடும்பத்தினருடன் கிளம்பி சென்றிருக்கின்றனர்.

மாணவிகள் அரசு பள்ளி

இந்நிலையில்,  இன்றும் ஜனவரி 18ம் தேதி விடுமுறை அறிவித்தால், சொந்த ஊருக்கு சென்றிருப்பவர்கள், ஊர் திரும்ப வசதியாக இருக்கும் என்று பொதுமக்கள், ஊழியர்களிடமிருந்து அரசுக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இதன் அடிப்படையில்  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக இணையதளங்களில் செய்திகள் பரவின. இது முற்றிலும் தவறான தகவல். பள்ளிக்கு விடுமுறை விடுவது குறித்து எந்த  அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. வழக்கம் போல் பள்ளிகள் இன்று ஜனவரி 18ம் தேதி முதல் செயல்படும்  என தெரிவித்துள்ளார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web