இன்னைக்கு லீவெல்லாம் இல்ல !! ஸ்கூலுக்கு போக தயாராகுங்க மாணவர்களே!!

 
விடுமுறை

புத்தாண்டு, பொங்கல் விடுமுறை, குடியரசு தின விடுமுறை என ஜனவரி மாதம் முழுவதுமே  நிறைய நாட்கள் அரசு விடுமுறை. அத்துடன் உள்ளூர் திருவிழாக்கள், பண்டிகைகள் காரணமாக உள்ளூர் விடுமுறைகள்.பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவ மாணவியரின் கல்வி பாதிக்கப்படாத வகையில் வகுப்புகள் நடத்த வேண்டும் என்பதால், விடுமுறை அறிவிக்கப்பட்ட நாட்களை ஈடு செய்யும் வகையில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் சனிக் கிழமைகளிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்த வேண்டும் என்று ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது.

மாணவிகள்

தமிழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன் பெய்த கனமழை மற்றும் மாண்டஸ் புயல் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை  அறிவிக்கப்பட்டது. அதற்கு மாற்று பணி நாளாக ஜனவரி 28 ம் தேதி பள்ளிகள் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

மாணவிகள்

அந்த வகையில் காஞ்சிபுரம் மற்றும் சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மழை விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், அதை ஈடுகட்டும் வகையில், சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில்  உள்ள அனைத்து பள்ளிகளும்  இன்று ஜனவரி 28ம் தேதி சனிக்கிழமை வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web