ஆதார் கார்டை இணைக்கலையா? கவலையை விடுங்க! கால அவகாசம் நீட்டிப்பு!

 
மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு

மின் இணைப்புடன் ஆதார் கார்டை இணைப்பதற்கு இன்றே கடைசி தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு ஜனவரி 31ம் தேதி வரையில் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மின்சார வாரியம் நுகர்வோர்கள் தங்கள் ஆதார் அட்டை மற்றும் மின்சார அட்டையை இணைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது.  இது குறித்த நடைமுறைகள், செயல்பாடுகளை  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டிருந்தது. மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு  அக்டோபர் 6ம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. ஆதார் எண்ணை இணைத்தால் தான் ஆன்லைனில் மின்கட்டணம் செலுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி தமிழகத்தில் முதல் நூறு யூனிட் மின்சாரத்துக்கான கட்டணத்தை அரசு மானியமாக வழங்கி வருகிறது. இந்த மானியத்தைப் பெற மின் நுகா்வோர் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் எனவும் மின்வாரியம் தெரிவித்தது.   

மின் இணைப்பு ஆதார்

ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்களும் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன.  மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக https://nsc.tnebltd.gov.in/adharupload என்ற இணையதள முகவரி வெளியிடப்பட்டது. இதில் ஆதார் அட்டையை பதிவேற்றம் செய்ய வேண்டும். இது தவிர  https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற புதிய இணையதள லிங்கில் மின் நுகர்வோர் தங்களது ஆதார் அட்டையை பதிவேற்றம் செய்ய தேவை இல்லை. அதற்கு பதிலாக ஆதார் எண்ணை பதிவு செய்தால் போதும். இதன் மூலம் மின்   இணைப்புடன் ஆதார் எண்ணை சுலபமாக இணைக்க முடியும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.   

மின் அட்டை ஆதார்

நவம்பர் 24 முதல் நவம்பர் 30 வரை இணைப்பதற்கான முதல் அறிவிப்பை வெளியிட்டது. பின்னர் மேலும் ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டது.  இன்று கடைசி நாள் என்பதால் பொதுமக்கள் அதிகளவில் மின்சார வாரியத்திற்கு வர தொடங்கினார். இதற்காக சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மின்வாரியம் https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற புதிய இணையதள முகவரியை பயன்படுத்தி இணைத்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
கூட்டம் அதிகமாக இருந்தால் கூடுதல் கவுண்டர்கள் மற்றும் கணினிகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என அரசு அறிவுறுத்தியிருந்தது.  தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரத்தை தொடர்ந்து பெற வேண்டும் என்றால் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜனவரி 31ம் தேதி வரையில், கடைசி தேதியை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web