இலவச வேட்டி..சேலை.. தமிழக அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்!

 
ஓபிஎஸ்

பொங்கல் பண்டிகை முடிந்தே 10 நாட்களுக்கும் மேலாகி விட்டது. இன்னமும் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய இலவச வேட்டி சேலைகளை வழங்காமல் இருப்பதற்கு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னதாக, பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட, தமிழக அரசு சார்பில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, விலையில்லா வேட்டி, சேலை மற்றும் ரூ1000  ரொக்கப் பணம், முழு கரும்பு ஆகியவை  வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ரேஷனில், பச்சரிசி, சர்க்கரை, ரூ.1000 ரொக்கப்பணமும், கரும்பும் வழங்கப்பட்டது.

பொங்கல்

இருப்பினும், தமிழகத்தின் பல பகுதிகளிலும் கரும்பு முறையாக தரப்படவில்லை. சில இடங்களில் குவியலாக உடைத்துப் போடப்பட்டிருந்த கரும்புகளைக் காட்டி, பொதுமக்களையே ஏதேனும் ஒரு கரும்பைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளச் சொல்லி ரேசன் பணியாளர்கள் ஒதுங்கி கொண்டார்கள். இன்று வரையிலும், ரேஷன் கடைகளில் இப்படி உடைந்த, தரமில்லாத கரும்புகள் குவியலாகவே காணப்படுகின்றன.

ஆரம்பத்தில் கரும்பு தர மறுத்த தமிழக அரசு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலை சிறுத்தைகள் தொல்.திருமா என பல அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு,பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க இருப்பதாக தெரிவித்தது. 

பொங்கல் பரிசு தொகுப்பு

இந்நிலையில், பொங்கல் பண்டிகையைக் கொண்டாட வழங்குவதாக அறிவிக்கப்பட்ட விலையில்லா வேட்டி, சேலைகளை பண்டிகை முடிந்து 10 தினங்களுக்கு மேலாகியும் வழங்காமல் இருப்பது குறித்து ஓபிஎஸ் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். சத்தமில்லாமல் இந்த திட்டத்தையே அரசு ரத்து செய்து விடுமோ என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்!

From around the web