அட!! ”நானே முதலாளி”!! பிரிட்டிஷ் கவுன்சில் வேலையை விட்டுவிட்டு டீக்கடை தொடங்கிய இளம்பெண்!!

 
ஷர்மிஸ்தா


இன்றைய வாழ்க்கை முறையில் வாழ்க்கைக்கும் படிப்பிற்கும் சம்பந்தமில்லை. நமது கனவு ஒன்று . பார்க்கும் வேலை ஒன்று என்றுதான் பெரும்பாலானவர்கள் வேலை செய்கின்றனர். பிடித்த வேலையை விட கிடைத்த வேலையை பிடித்ததாக மாற்ற முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். இதனால் இயந்திரத்தனமாக வேலை பார்த்து பல நேரங்களில் மன அழுத்தங்களால் நம்மையே நமக்கு பிடிக்காமல் போய்விடுகிறது. ஒரு சிலர் தான் பிடித்த வேலையை இஷ்டப்பட்டு செய்து கொண்டு காலம் தள்ளி வருகின்றனர். இந்தியாவை பொறுத்தவரை எப்படியாவது கஷ்டப்பட்டு படித்து நல்ல கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து விட வேண்டும் என்பது தான்.

ஷர்மிஸ்தா

இது தான் பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தினரின் லட்சியம்.  சிறுவயது முதலே வீடுகளிலும் கூட இதையேதான் சொல்லிச் சொல்லி வளர்ப்பார்கள்.  எதாவது ஒரு பொறியியல் படிப்பை முடித்துவிட்டு ஐடி நிறுவனங்களில் வேலைக்குச் சென்று விடுவதே கனவு.  கொஞ்ச காலம் கஷ்டப்பட்டு வேலை செய்துவிட்டு.. அதன் பிறகு தங்கள் கனவை நோக்கிச் செல்லலாம் என்பதே இவரின் இலக்கு. ஆனால் கடமைகள் துரத்த ஆரம்பித்த உடன் கனவுகள் மறந்து போய்விடுகின்றன.  இதனால் வேறு வழியில்லாமல் ஐடி துறையிலேயே அவர்கள் காலத்தைக் கழிக்கின்றனர். 


ஆனால் தலைநகர் டெல்லியில் ஒரு இளம்பெண் பிரிட்டிஷ் கவுன்சிலில்  தான் பார்த்த வேலையை தூக்கி எறிந்துவிட்டு சிறிய அளவில்  சொந்தமாக டீக்கடை ஒன்றை தொடங்கியுள்ளார். இவரின் பெயர்  ஷர்மிஸ்தா கோஷ். இவர் எம்.ஏ. ஆங்கில இலக்கியம்  படித்தவர். இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற வீரர் பிரிகேடியர் சஞ்சய் கன்னா தனது ட்விட்டர் பக்கத்தில்  ஷர்மிஸ்தா கோஷ் குறித்து செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "ஷர்மிஸ்தா கோஷ் ஆங்கிலத்தில் எம்ஏ படித்தவர்... பிரிட்டிஷ் கவுன்சில் லைப்ரரியில் வேலை பார்த்து வந்த அவருக்கு நாடு முழுக்க தனது டீக்கடை செயினை திறக்க வேண்டும் என்பதே லட்சியம்.

ஷர்மிஸ்தா

 இதற்காக அவர் தனது வேலையையே விட்டு விட்டார். சில நாட்களுக்கு முன் நான் டெல்லி கான்ட்டின் கோபிநாத் பஜாரில் தேநீர் குடிக்க ஒரு சிறிய கடைக்குச் சென்றேன். அங்குச் சிறப்பாக ஆங்கிலம் பேசி இளம்பெண் ஒருவர் என்னை வரவேற்றார். அவர் தனது தோழி பாவனா ராவ் என்பவருடன் இணைந்து இந்த டீக்கடையை நடத்தி வருவதாக தெரிவித்தார். பாவனா ராவ் பிரபல லுஃப்தான்சா ஏர்லைன்ஸில் பணிபுரிந்து கொண்டே ஷர்மிஸ்தாவிற்கு சப்போர்ட் பண்ணி  வருகிறார். உயர் படிப்பு நல்ல வேலை என்பதை காட்டிலும் பிடித்த வேலையை செய்ய வேண்டும்.

பிடித்த வேலையை சிறிது காலம் செய்தாலே சிறப்பான இடத்தை அடையலாம்.கனவை நோக்கி சிறிய படிகளை வைக்கத் தொடங்குவதே முக்கிய இலக்கு" என பதிவிட்டுள்ளார். 
 அவரது பதிவிற்கு நெட்டிசன்கள் பலரும் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.  ஷர்மிஸ்தாவின்  இந்த செயல் இளைஞர்களுக்கு மிகவும் உத்வேகம் அளிப்பதாக உள்ளது. அத்துடன் அந்தப் பக்கம் சென்றால் நிச்சயம் ஷர்மிஸ்தாவின் கடையில் தேநீர் அருந்துவோம் என பதிவிட்டு வருகின்றனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web