அட!! காலை சிற்றுண்டியில் வாழைப்பழம்!! இன்று முதல் தொடக்கம்!!

 
மாணவிகள்

தமிழகத்தில் பள்ளிப்பிள்ளைகளின் பசிப்பிணிப் போக்க மதிய உணவுடன் தற்போது காலை சிற்றுண்டியும் வழங்கப்பட்டு வருகிறது. இதே போல் இந்தியாவின் மற்ற மாநிலங்களும் தமிழகத்தின் திட்டத்தினை கையில் எடுத்துள்ளன. அதன்படி கேரளாவில் அரசு பள்ளிகளில் காலை உணவுடன்  வாழைப்பழம் வழங்கும் திட்டம் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

சிற்றுண்டி

இந்த திட்டத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 8, 9 மற்றும் 10 ம் வகுப்பு படிக்கும்  மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட உள்ளது.  காலை உணவில் ஆப்பம், இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் கறி இவைகளுடன்  முட்டை மற்றும் வாழைப்பழமும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்தை செயல்படுத்த பல்வேறு பரிசீலணைகள், ஆய்வுகள், திட்ட மாதிரிகள் அனைத்தும் நடத்தப்பட்டன.

சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடலாமா? ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறும் கருத்து இதோ!

மாணவர்கள் கணக்கெடுப்பின் படி இத்திட்டம் பயனாளிகளை  தேர்வு செய்துள்ளது. மாணவர்களின் ஆரோக்கியம் குறித்து சுகாதார துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில்  பெரும்பாலான மாணவர்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்காமல் ரத்த சோகை இருந்து வந்தது.  அதனை களையும் வகையில் இந்த புதிய காலை உணவு திட்டம்  தொடங்கப்பட்டு உள்ளதாக நிலைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார். 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web