அடக்கடவுளே... ஷூட்டிங் ஸ்பாட்டில் உதவி இயக்குநர் திடீர் மரணம்! அதிர்ச்சியில் திரையுலகம்!

 
சாந்தனு

என்ன தான் நடக்கிறது? அடக்கடவுளே? என்று ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த அத்தனைப் பேருமே அதிர்ச்சிக்குள் ஆழ்ந்தார்கள். ரொம்ப சின்ன வயசு. இத்தனைக்கும் எந்தவிதமான கெட்ட பழக்கமும் கிடையாது. உணவு விஷயத்திலும், உடல் ஆரோக்கியத்திலும் அத்தனை கவனமாக இருந்து வந்த இளம் இயக்குநர் ராமகிருஷ்ணன். இந்நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டில் திடீரென நிலைக்குலைந்து சரிந்து விழுந்த ராமகிருஷ்ணன் உயிரிழந்தாக நடிகர் சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் சோகத்துடன் பகிர்ந்துள்ளார். 

சினிமா ஒரு மாய பூதம். எத்தனையோ காலங்களாக எத்தனையோ ஊர்களில் இருந்தெல்லாம் அந்த மாய பூதத்துடன் மல்லுகட்டு ஜெயிக்க நினைத்து தலைமுறை தலைமுறையாய் இளைஞர்கள் வருகிறார்கள். சிலர், மேலேறி சவாரி செய்கிறார்கள். சிலரைக் குப்புறப் புரட்டிப் போட்டு விடுகிறது. 


இப்படி சினிமா கனவுகளோடு வருபவர்களில் பெரும்பாலானோர்களுக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல்வேறு இன்னல்கள் இருக்கும். இருந்த போதிலும் அதனையும் பொருட்படுத்தாமல் வெளியே செய்துகொண்டே இருப்பர். அவர்களுக்கு முறையான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றாலும் கூட அதையே திரும்ப திரும்ப செய்வர்.

இந்நிலையில் இளம் உதவி இயக்குநர் ராமகிருஷ்ணன் (26) ஷூட்டிங் ஸ்பாட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நடிகர் சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “நேற்று இரவு ஒரு நல்ல நண்பரை இழந்து விட்டேன். உண்மையில் சிறந்த உதவி இயக்குநர் ராமகிருஷ்ணன். எந்தவொரு கெட்டப் பழக்கமும் இல்லாத நபர். ஆனால் கடவுள் அவரை அழைத்துக் கொண்டார். பணி செய்து கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

வாழ்க்கை நிலையில்லாத ஒன்று. அவர் இறப்பதற்கு 1 மணி நேரத்துக்கு முன்னாள் அவர் எனக்கு போன் செய்த போது என்னால் எடுக்க முடியவில்லை; நான் அவர் அழைப்பை எடுத்திருக்கலாம் என நினைக்கும் போது மனம் வேதனையளிக்கிறது. தயவு செய்து தேவையில்லாத வெறுப்புகளையும் நெகட்டிவிட்டிகளையும் யாரும் பரப்ப வேண்டாம். வாழ்க்கை இருக்கும் வரை மகிழ்ச்சியாகவும், மற்றவர்களை சிரிக்க வைத்தும் வாழ்வோம். மகிழ்ச்சியாக இருக்க முயற்சிப்போம்.. மன அழுத்தத்தை தவிர்க்க முயற்சிப்போம். இந்த உலகத்தில் இப்போதைக்கு இருக்கும் THE BIGGEST CULPRIT-ஏ மன அழுத்தம் தான்.

Ramakrishnan

நீங்கள் யாரிடமாவது பேசுங்கள், அந்த வலியையும் மன அழுத்தத்தையும் கடந்து வர தனியாகச் இருந்து விடாதீர்கள்... அது உங்களைத் தின்று விடும்... "என்ன சார் இருக்கு இந்த உலகத்திலே…அவ்ளோ எதிர்மறை, வெறுப்பு.. சந்தோஷமா இருங்க.. அன்பைப் பரப்புங்க, அதுக்கு ஒண்ணும் செலவில்லை"...-அது தான் ராமகிருஷ்ணா என்னிடம் அடிக்கடி சொல்வார்" என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

இவரது பதிவை அடுத்து மறைந்த இளம் உதவி இயக்குநர் ராமகிருஷ்ணாவுக்கு பலரும் இணையதளம் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஷூட்டிங் ஸ்பாட்டில் பணி செய்து கொண்டிருக்கும் போதே இளம் உதவி இயக்குநர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்!