ஆம்னி பேருந்துகள் கட்டணக் கொள்ளை!! புலம்பி தவிக்கும் பொதுமக்கள்!!

 
koyambedu bus stand ஆம்னி பஸ்


தமிழகம் முழுவதும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 12 நாட்கள் விடுமுறை, கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக அனைவரும் சொந்த ஊருக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். சிலர் ஏற்கனவே சென்று விட்ட நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக மீதமிருப்போர் தயாராகி வரும் நிலையில் சிறப்பு ரயில்கள், பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டாலும் ஆம்னி பேருந்தில் கடைசி நேர அவசரத்தில் செல்பவர்கள் பலர். ஆம்னி பேருந்தை பொறுத்தவரை கடைசி நேர கட்டணக் கொள்ளை என்பது ஒவ்வொரு பண்டிகை காலத்திலும் நடப்பது தான்

தனியார் ஆம்னி பேருந்து கோயம்பேடு

தற்போது புத்தாண்டு  கொண்டாட்டத்துக்காக சொந்த ஊர்களுக்கு சென்ற பயணிகளை குறிவைத்து ஆம்னி பஸ்களின் கட்டணம் 'கிடுகிடு'வென உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில்  விடுமுறை முடிந்து ஜனவரி 1ம் தேதி சென்னை திரும்புவதற்கான ஆம்னி பேருந்து கட்டணம் வழக்கத்தை விட 2 முதல் 3 மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து சென்னை திரும்புவதற்கு சுமார் ரூ.700 முதல் ரூ.1000 என்பது வழக்கமான கட்டணம், தற்போது ஜனவரி 1ம் தேதி ரூ3,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. கோவையில் இருந்து சென்னை திரும்புவதற்கு ரூ.1000 என்ற வழக்கமான கட்டணம், ஜன.1ம் தேதி ரூ.2500 - 3000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

ஆம்னி

நெல்லையில் இருந்து சென்னை திரும்ப ஜன.1ல் ரூ3,500 முதல் ரூ.4,500 வரை உயர்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு பண்டிகை முடிந்து சென்னை திரும்ப முன்பதிவு செய்பவர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கலக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது.இப்படி ஆம்னி பேருந்துகளில் கட்டணம் அதிக அளவில் வசூலிக்கப்படுவது, போக்குவரத்து விதிமுறைகளுக்கு மீறிய செயல் என்றும் கட்டண நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் இது குறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில்  போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியதில்  கோயம்போடு, போரூர் பகுதிகளில் அதிக கட்டணம் வசூலித்த 49 பேருந்துகளுக்கு ரூ.92,500 அபராதம் விதிக்கப்பட்டது

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web