அச்சச்சோ என்னாச்சு?! இயக்குநர் மனோபாலா மருத்துவமனையில் அனுமதி!! ரசிகர்கள் பிரார்த்தனை!!

 
மனோபாலா

தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகி நடிகர்,  நகைச்சுவை நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமை வாய்ந்தவராக   இருந்து வருபவர் மனோபாலா. இவர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 1982-ல் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘ஆகாய கங்கை’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் மனோபாலா. அதனைத் தொடர்ந்து பிள்ளைநிலா, ஊர்க்காவலன், என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். மேலும், 1994-ல் வெளியான ‘தாய்மாமன்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

 

Manobala

அதனைத் தொடர்ந்து தோழர் பாண்டியன், நந்தினி, நட்புக்காக, தலைமுறை, தாஜ்மகால், மின்சார கண்ணா உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். அதுமட்டுமின்றி சில படங்களை இவர் தயாரித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மனோபாலா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டதாகவும் அதன் பிறகு தற்போது  குணமடைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Manobala

இந்த நிலையில் நடிகர் மனோபாலாவை நேரில் சென்று நடிகர் சங்க தலைவர் பூச்சி முருகன் நலம் விசாரித்தார். இது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இந்த நிலையில் நடிகர் மனோபாலா விரைவில் பூரண குணமடைந்து மீண்டும் படங்களில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web