பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபாபென்ஷா காலமானார்!! பிரபலங்கள் இரங்கல்!!

 
பிரபாபென்


பத்மஸ்ரீ விருது பெற்றவர்  பிரபாபென் சோபாக்சந்த் ஷா. இவருக்கு வயது 92. இவர் வயது மூப்பு மற்றும் உடல் நலக் குறைபாடு காரணமாக உயிரிழந்தார். பிரபாபென் சோபாக்சந்த் ஷா தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ யூனியன் பிரதேசத்தில் வசித்து வரும் ஒரு சமூக சேவகர் . இவர்  “தாமன் கி திவ்யா” என அன்புடன் அழைக்கப்படுகிறார்.
ஏழை எளிய மக்களின் அடிப்படை தேவைகளான உணவு, உடை, இருப்பிடத்திற்கு ஏற்பாடு செய்தார். குஜராத் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அகில இந்திய மகளிர் கவுன்சிலின் “வட்டா வங்கிகளை” ஒருங்கிணைத்து உதவிக்கரம் நீட்டியவர் 2022 ல்  தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூவில் சமூகப் பணிக்காக இந்தியாவின் 4 வது உயரிய சிவிலியன் விருதான பத்மஸ்ரீ விருதை பிரபாபென் பெற்ற பெருமைக்குரியவர் சோபாக்சந்த் ஷா .

பிரபாபென்

அவர் மூச்சுத் திணறல் மற்றும் இதயம் தொடர்பான நோய்களால் பெரும் அவதிப்பட்டார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அவருடைய மகள் வர்ஷா ஷா, ” வயது மற்றும் இதயக் கோளாறுகள் காரணமாக  சிகிச்சை பலனின்றி டாமனில் உள்ள அரசு மருத்துவமனையில் உயிரிழந்து விட்டார்” என தெரிவித்துள்ளார்.  அவர் கடந்த 60 ஆண்டுகளாக பெண்கள்  மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்தவர். 

rip


பிரபாபென் 1930ல் சூரத்தில் பிறந்தவர்.  1963 ல் டாமனில் குடியேறியது முதலே பர்தோலி நகரத்தில் உள்ள ஸ்வராஜ் ஆசிரமத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். குழந்தைப் பருவத்திலிருந்தே காந்திய சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவர்.பெண்கள் தங்கள் சுயதேவைகளை தாங்களே பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் பெண்களுக்கு இலவச தையல் வகுப்புகளைத் தொடங்கினார், மகளிர் கூட்டுறவு சங்கம் மற்றும் மகளிர் கடன் சங்கத்தையும் தொடங்கி அதன் மூலம் நிதி அளித்து பெண்களை தொழில் செய்ய ஊக்குவித்தார்.பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்காக ஒரு நூலகத்தையும் தொடங்கினார்.பன்முக திறமைகளை பெற்ற இவர் வாழ்நாள் முழுவதும் பெண்கள் முன்னேற்றத்திற்காக குரல் கொடுத்தவர். இவரது இறப்பிற்கு பிரபலங்கள், சமூக சேவை அமைப்புக்கள், உறவினர்கள் சமூக ஆர்வலர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web