மசோதா நிறைவேற்றம்!! அரசுப்பணியில் சேர இனி தமிழ் கட்டாயம்!!

 
தேர்வு

தமிழக அரசில் காலிப்பணியிடங்கள் போட்டி தேர்வு முகமையால் நடத்தப்படும் தேர்வுகளின் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளிலும் தமிழில் தேர்ச்சி கட்டாயம் என்பதற்கான மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.2016ல் தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட அரசு  பணியாளர் சட்டத்தை திருத்துவதற்கான மசோதாவை இன்று மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

டிஎன்பிஎஸ்சி

அதில், "தமிழில்  தேர்ச்சி பெறாதவர்கள் பணிக்கு சேர்ந்திருந்தாலும் பணியில் சேர்ந்த தேதியிலிருந்து 2  ஆண்டுகளுக்குள் தமிழில் தேர்ச்சி பெற வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் இது குறித்து தமிழக அரசு பணிகளுக்காக நடத்தப்படும் அனைத்து தேர்வுகளிலும்  தமிழ் மொழி கட்டாயம் என 2021 டிசம்பரில் வெளியான அரசாணையை செயல்படுத்தும் வகையில் இந்த அரசாணை கொண்டுவரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஆனால் இந்த மசோதா குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சி உறுப்பினர் வேல்முருகன், "திருத்தம் செய்யப்பட்டுள்ள  இந்த மசோதாவால் இந்தியா முழுவதும் உள்ள மற்ற மாநிலத்தவர்களும் அரசுப்பணியில் அமர்ந்து விட முடியும். தமிழக அரசின் அரசுப்பணி தமிழர்களுக்கே என்பதை  மறுபரிசீலணை செய்ய வேண்டும்.  இதன் பிறகு பேசிய பாமக உறுப்பினர் ஜி.கே.மணியும் வெளிமாநிலத்தவர்கள் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டால் தமிழர்கள்  கையேந்தும் சூழல் உருவாகியுள்ளது.

டிஎன்பிஎஸ்சி

இதனால் இச்சட்டத்தை மறுபரிசீலணை செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார். இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், " உறுப்பினர்கள் கோரிய திருத்தங்கள் அனைத்தும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதன் பிறகே  சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு இந்த மசோதா ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web