பட்டைய கிளப்பும் அரசியல் கட்சிகள்!! வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம்?!

 
மின்சாரம்

கர்நாடகாவில் மே மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளி வீச தொடங்கியுள்ளன. இங்கு தற்போது ஆட்சியில் இருக்கும் பிஜேபி ஜனசங்கல்ப யாத்திரை  நடத்தி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. காங்கிரஸ் கட்சி ' பேருந்து யாத்திரை பயணத்தை நேற்று தொடங்கியுள்ளது. இது குறித்து நடைபெற்ற கூட்டத்தில் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.  

இலங்கை மின் கட்டணம்

இதில் ஆற்றிய உரையில் இருந்து மக்களின் பிரச்சினைகள், வலிகள், வேதனைகள், கருத்துகளை அறியும் வகையில் இந்த பயணம் தொடங்கப்பட்டுள்ளது . மக்களுக்கு பலம் கொடுக்கவும், வாழ்க்கையில் ஒளி ஏற்றவும் தான் காங்கிரஸ் இங்கு வந்துள்ளது. மக்களின் கஷ்டங்களை தீர்ப்பதே இந்த பயணத்தின் நோக்கம் 1924ல் பெலகாவியில் நடைபெற்ற மாநாட்டில் தான் காங்கிரஸ் கட்சிக்கு மகாத்மா காந்தி தலைமை ஏற்று சுதந்திர போராட்டத்தை நடத்தினார். தற்போது மீண்டும் அதே இடத்தில் இருந்து இந்த பயணம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தில் பொதுமக்களுக்கு 5 முக்கியமான வாக்குறுதிகளை அறிவிக்க முடிவு செய்துள்ளோம். 

அசத்தல் !! உடனடி மின் இணைப்பு!! தமிழக அரசு அதிரடி!!
அதன்படி கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் மின்சாரம் இலவசம். விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டு வருவோம்.  இதனால்  மாதாந்திர குடும்ப செலவு குறையும். நிதி சுமையும் குறையும். 2018ல் அளிக்கப்பட்ட விவசாயிகளின் கடன் ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி செய்யப்படும் என்ற பிஜேபியின் வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இது குறித்து மேலும்  அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கர்நாடகம் வருகையில் பேச இருக்கிறார். ஜனவரி 16ம் தேதி நடைபெறும்  கட்சியின் மகளிர் அணி மாநாட்டில் பிரியங்கா பல்வேறு புதிய அறிவிப்புக்களை வெளியிடுவார் எனப் பேசி உள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web