உச்சம் தொட்ட தங்கம்!! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!!

 
gold jewel actress sneha

உக்ரைன் போர், கொரோனா ஊரடங்கு, பொருளாதாரச் சரிவு , தங்கத்தின் மீதான இறக்குமதி வரி காரணமாக தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. தங்கத்தின் விலை ஏறினாலும், இறங்கினாலும் இந்தியாவை பொறுத்தவரை தங்கத்தின் மவுசு தனி தான். நடுத்தர வர்க்கத்தினர், இல்லத்தரசிகளுக்கு தங்கநகை சேமிப்பு என்பது பெரும் சேமிப்பாகவும், முதலீடாகவும் இருந்து வருகிறது.நவம்பர் தொடக்கம் முதலே உச்சம் தொட்டு வரும் தங்கத்தின் விலை நடப்பு வாரத்தில் சற்றே குறைந்து வருகிறது. ஒரு நாள் இறங்கினாலும் அடுத்த நாளே தங்கத்தின் விலை அதிகரித்து வருவது நகைப்பிரியர்கள் , முதலீட்டாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. 

தங்கம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சர்வதேச சந்தை விலை நிலவரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்த வாரத் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் பெருமகிழ்ச்சி  அடைந்துள்ளனர்.இந்தியாவில் கொரோனா ஊரடங்கு நடவடிக்கைகளுக்கு பிறகு தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

நேற்றைய விலை நிலவரத்தின் படி  ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,885க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து, ஒரு சவரன் ரூ.39,080க்கும்  விற்பனை செய்யப்பட்டது. சென்னையில்,  இன்றைய விலை நிலவரத்தின் படி ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 அதிகரித்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,931ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

gold actress

அதே நேரத்தில் சவரனுக்கு ரூ.280 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.39,448க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.தங்கத்தின் விலை அதிகரித்த அதே நேரத்தில்  வெள்ளியின் விலை, 70 காசுகள் அதிகரித்துள்ளது. அதன்படி  ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.68.20 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.700 அதிகரித்து, ரூ.68,200க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web