மக்களே உஷார்!! ஜனவரி 22, 23 தேதிகளில் உறைபனிக்கு வாய்ப்பு!!

 
ஊட்டி உறைபனி

தென் தமிழ்நாட்டு மாவட்டங்கள், டெல்டாவை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் ஜனவரி 22 மற்றும் ஜனவரி 23 ஆகிய தேதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிகாலையில் பனிமூட்டம் அதிகரித்து வருகிறது.

பனிமூட்டம்

அதிலும் நீலகிரி , கோவை மாவட்டங்களில் உறைபனித்தாக்கம் அதிகம் உள்ளது. நீலகிரியில் 0 டிகிரி செல்சியஸ் நிலவி வருவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.  வாகனங்களில் பெட்ரோல், டீசல் ஆகியவை உறையத் தொடங்கி விடுகின்றன. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த உறைபனி தாக்கம் மேலும் நீடிக்கும் எனவும் இது குறித்து செய்திக்குறிப்பு ஒன்றையும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவக்கூடும்.  உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கலாம் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

பனிமூட்டம்
புறநகர் பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம்  நிலவும்.  நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில்  உறை பனிக்கு வாய்ப்புள்ளது.சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்யலாம். அதிகபட்ச வெப்பநிலையாக  30 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக  20டிகிரி செல்சியசும் நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web