அடுத்த 5 நாட்களுக்கு 18 மாவட்ட மக்களே கவனமா இருங்க!! வெதர்மேன் எச்சரிக்கை!!

 
மழை

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் நிலவி வரும்  வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில்  இன்று முதல் நவம்பர்  30ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.  இது குறித்து  பிரதீப் ஜான் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்  சென்னை முதல் நாகப்பட்டினம்  வரை அடுத்த 2 நாட்கள் தமிழகத்தின்  மேற்கு மற்றும் தெற்கு மாவட்டங்களின் சில பகுதிகளில் மழை பெய்ய உள்ளது.

பிரதீப் ஜான்

மேலும் டிசம்பர்  1ம் தேதி  முதல் டிசம்பர்  4ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார். தமிழகத்தின்  ஈரோடு, சேலம், கோவை, திருப்பூர், நீலகிரி, கரூர், திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, தென்காசி, மதுரை, விருதுநகர் புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் மழை பெய்யலாம். டிசம்பர் 2வது வாரத்தில் இந்தோ- சீனா கடல் பகுதியில் சக்கரம் உருவாகலாம். சக்கரங்கள் என்பவை பெரும்பாலும் குறைந்த அட்சரேகையில் நகரும் எனத் தெரிவித்துள்ளார். 

 இந்நிலையில் அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா பகுதிகளில்  2  புயல் சுழற்சிகள் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

புயல் காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலம்

அரபிக்கடலிலும், வங்கக்கடலில் கிழக்கு மத்திய பகுதி மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் பகுதியிலும் இந்த சுழற்சி நிலவி வருகிறது.இதன் அடிப்படையில் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web