வெடித்த மக்கள் போராட்டம்!! 17 பேர் பலி!! 2 அமைச்சர்கள் ராஜினாமா!!

 
பெரு

பெரு நாட்டில் அரசியல் குழப்பங்கள் அதிகரித்து வருகின்றன. இதன் அடிப்படையில்  பெரு ஜனாதிபதி பெட்ரோ காஸ்டிலோவை எதிர்த்து நாடாளுமன்றத்தை கலைத்து , புதிய அரசை நியமிக்கப்போவதாக எம்பிக்கள் அறிவித்தனர். அறிவித்தபடி   நாடாளுமன்ற எம்.பிக்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவருக்கு எதிராக வாக்களித்து அவரை பதவி நீக்கம் செய்தனர். அத்துடன் மக்களை கிளர்ச்சி செய்ய தூண்டியதாக கூறி அவர் கைது செய்யப்பட்டார்

பெரு

. அவருக்கு அடுத்த நிலையில்  துணை ஜனாதிபதியாக இருந்த டினா போலுவார்டே புதிய ஜனாதிபதியாக இம்மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார். ஜனாதிபதி மாற்றப்பட்டதற்கும், பெட்ரோ காஸ்டிலோ கைது செய்யப்பட்டதற்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.  கடந்த சில நாட்களாக இந்த போராட்டம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதனால்  பல்வேறு இடஙக்ளில் கலவரமாக மாறி வருகிறது.

பெரு

இதுவரை இந்த போராட்டத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை கட்டுப்படுத்த புதிய அரசு அவசர நிலையை அறிவித்துள்ளது. அத்துடன் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர  ராணுவத்தினரை களமிறக்கியுள்ளது. இச்செயல்களுக்கு பொறுப்பேற்கும் வகையில் , பெரு நாட்டின் கல்வி அமைச்சர் பாட்ரிசியா கோரியா மற்றும் கலாச்சார அமைச்சர் ஜெய்ர் பெரெஸ் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர்.  இந்த அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web