உண்டியல் வயிறு!! 187 நாணயங்களை சாப்பிட்டவர் !!

 
உண்டியல் வயிறு

கர்நாடக மாநிலத்தில் பாகல்கோட் ரெய்ச்சூர் மாவட்டம் சந்தே கெளூரு கிராமத்தில் வசித்து வருபவர்  58 வயது தியாமப்பா ஹரிஜன் . இவர் நெடு நாட்களாக கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். அத்துடன் இவருக்கு பல காலமாக செரிமானப் பிரச்சனையும் இருந்து வந்துள்ளது. அதே நேரத்தில் இவர் குடிப்பழக்கத்திற்கும் ஆளானார்

உண்டியல் வயிறு

என்னென்னவோ வீட்டு வைத்தியங்கள் பார்த்தும் சரியாகவில்லை. வீட்டில் திடீரென இவர் ரூ5 நாணயத்தை விழுங்குவதை குடும்பத்தினர் பார்த்தனர். இதனால் அவரை மருத்துவமனையில் சேர்த்து வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்போது வயிற்றில் 100க்கும் மேற்பட்ட நாணயங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை வெளியில் எடுக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அறுவை சிகிச்சை

நவம்பர் 27ம் தேதி நேற்று அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதில் வயிற்றில் 56 நாணயங்கள், 51 ரூ2 நாணயங்கள் மற்றும் 80 ஒரு ரூபாய் நாணயங்கள் அகற்றப்பட்டன. இந்த நாணயங்களின் மொத்த எடை 1.2 கிலோ. அறுவை சிகிச்சைக்கு பிறகு ஹரிஜன் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!