இப்பவே ப்ளான் பண்ணுங்க!! 4 நாட்கள் வங்கி சேவைகள் முடங்கும் அபாயம்!! நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்!!

 
வங்கி வேலை நிறுத்தம்

மாச சம்பளம் வாங்கி கையில் பணத்த வச்சி செலவு பண்ண நம்மள எல்லாம் டிஜிட்டல் இந்தியா, வித் அவுட் கரன்சின்னு புதுசு புதுசா திட்டங்கள அறிவிச்சு எப்பப் பாரு வங்கி பின்னால ஓட வச்சிட்டாங்க. அதுவும் பரவால்லன்னு நினைக்க ஆரம்பிச்சா தொடர்ந்து 4 நாட்கள் வங்கி செயல்படாதுன்னு அதிரடி அறிவிப்ப வெளியிட்டிருக்காங்க மக்களே. சரியா திட்டமிட்டுக்கோங்க. புதுவருஷம் தொடங்கி இன்னமும் முழுசா ஒரு மாசம் கூட முடியல. இப்பதான் பொங்கல் கொண்டாட்டமே முடிஞ்சிருக்கு. அதுக்கான செலவுகள், அடுத்து வரப்போற சுபமுகூர்த்த செலவுகள்னு திட்டமிடவே இல்ல. ஆனா அதுக்குள்ள வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமா  தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் செயல்படாதுன்னு அதிரடி அறிவிப்பை வங்கி வெளியிட்டிருக்கு. இதனால் வாடிக்கையாளர்கள் வங்கிப் பணிகளை தெளிவா திட்டமிட்டுக்கோங்க. 


வாரத்தில் 5 நாட்கள் வேலை, தேசிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல், ஓய்வூதியத்தை மாற்றி அமைத்தல், சம்பள உயர்வு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்குதல் உட்பட பல  கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு,  ஜனவரி 30 மற்றும் 31ம் தேதிகளில் வங்கிகள் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. மும்பையில் துணை தலைமை தொழிலாளர் ஆணையாளர் முன்னிலையில் நேற்று சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.  ஆனால், எந்தவித  உறுதியான முடிவுகளும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து அகில இந்திய வங்கி பணியாளர்கள் சம்மேளன பொதுச்செயலாளர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சமரச பேச்சுவார்த்தையில் எங்கள் கோரிக்கைகளுக்கு எந்த உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்புடன் 15 நாட்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்துவதாக இந்திய வங்கிகள் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் அது குறித்த  எந்த உத்தரவாதமும் அளிக்கப்படாததால், வங்கி ஊழியர்கள் அனைவரும் திட்டமிட்டபடி வேலைநிறுத்தத்தில் ஈடுபட கேட்டுக் கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 30 மற்றும் 31ம் தேதி வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். விஷயம் இது தான். இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கிகளில் பணி புரியும் ஊழியர்களின் சம்பள உயர்வு, வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை எனப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இது குறித்து மும்பையில் நடைப்பெற்ற வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு மாநாட்டில் ஜனவரி 30, 31ம் தேதிகளில் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது. 

தொடர்ந்து 2 நாட்களுக்கு வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்..!!
அதற்கு முந்தைய இரு தினங்களும் வங்கி விடுமுறை தினங்களாக அமைந்திருக்கின்றன. அதாவது ஜனவரி 28ம் தேதி மாதத்தின் 4ம் சனிக்கிழமை விடுமுறை தினம். அடுத்த நாளான ஜனவரி 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை  பொதுவான விடுமுறை தினம், ஜனவரி 30ம் தேதி  திங்கட் கிழமை, ஜனவரி 31 செவ்வாய் கிழமை என தொடர்ந்து 4 நாட்கள் வங்கி சேவைகள் முழுவதுமாக பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து 2 நாட்களுக்கு வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்..!!

வேலைநிறுத்தம் குறித்து வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு துணைப் பொதுச் செயலாளர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சம்பள உயர்வு, தேசிய ஓய்வூதிய திட்டத்தை கைவிடுதல், வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை, புதிய ஊழியர்களை தேர்வு செய்வது, ஓய்வூதியத்தில் மாற்றம் ஆகிய கொள்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். இந்த கோரிக்கைகளை இந்திய வங்கிகள் சங்கம் ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணித்தால் வேலை நிறுத்தத்தை தவிர வேறு வாய்ப்பில்லை என கூறியுள்ளார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web