ஆட்டம், பாட்டு , கொண்டாட்டம், பிரம்...மாண்டம் !! முகேஷ் அம்பானி , ராதிகா நிச்சயதார்த்தம்!!

 
ஆனந்த் அம்பானி

முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் என்கோர் ஹெல்த்கேர் தலைமை நிர்வாக அதிகாரி வீரேன் மெர்சன்டின் மகள் ராதிகா மெர்சன்டிற்கும் திருமண நிச்சயதார்த்தம் மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் `ஆன்டிலியா' பங்களாவில், நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.நிச்சயதார்த்த விழாவை முன்னிட்டு வீடு முழுவதும் பலூன்கள், பூக்கள் , வாசனை திரவியங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. குஜராத் பாரம்பரிய குடும்ப சடங்குகள் முறைப்படி விழா நடைபெற்றது. ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்ட் இருவரும்  மோதிரம் மாற்றிக்கொண்டு குடும்ப உறுப்பினர்களுடன் புகைப்படங்களை எடுத்துக்கொணடனர்.


 இந்நிகழ்வில் பார்வையாளர்களை அதிகம் கவர்ந்தது  நிகழ்ச்சியில் ராதிகா மெர்ச்சன்ட் அணிந்திருந்த லெஹங்கா தான். இந்த ஆடையை  பிரபல இந்திய ஆடை வடிவமைப்பாளர் அபு ஜானி சந்தீப் கோஸ்லா வடிவமைத்திருந்தார்.  அத்துடன் அவர் அணிந்திருந்த வைர நெக்லஸ், நெற்றிச்சுட்டி, ஜிமிக்கி, மோதிரங்கள் அனைத்தும் உலகம் முழுவதும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி இருக்கிறது.  அவருக்கு பொருத்தமாக ஆனந்த் அம்பானியும் நீல நிற குர்தா செட்டில் மேடையில்  வசீகரமாக இருந்தார்.   இதற்கு முன் நடைபெற்ற மெஹந்தி விழாவிலும்,  ராதிகா மெர்ச்சன்ட், அபு ஜானி சந்தீப் கோஸ்லா வடிவமைப்பில் உருவான இளஞ்சிவப்பு லெஹங்கா உடையில்  அழகான தோற்றத்தில் ஜொலித்தார்.  இந்த நிச்சயதார்த்த விழாவில் சச்சின் டெண்டுல்கர், அஞ்சலி டெண்டுல்கர், ராஜ்குமார் ஹிரானி , ஐஸ்வர்யா பச்சன், போனிகபூர் மகள்கள் என பாலிவுட் நட்சத்திரங்களும், தொழிலதிபர்களும் பிரபலங்களும், அரசியல் தலைவர்களும்  கலந்து கொண்டு தம்பதியரை ஆசிர்வதித்தனர்.

 

ambani

இருவரின் நிச்சயதார்த்தமானது குடும்பத்தினர் நண்பர்கள் கலந்துகொண்டனர்.  திருமண நிச்சயத்தை குறிக்கும் லக்கின பத்திரிகை வாசிக்கப்பட்டது. பின்னர் பரிசுகளையும் இனிப்புகளையும் இரு குடும்பத்தினரும் மாற்றிக்கொண்டனர். பின்னர் நீடா அம்பானி தலைமையில் அம்பானி குடும்பத்தினர் நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


ஆனந்த் அம்பானியின் சகோதரி இஷா நிச்சயதார்த்த நிகழ்வை அறிவித்தார். அதைத்தொடர்ந்து குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் ஆனந்த் அம்பானியும், ராதிகா மெர்ச்சன்ட்டும் மோதிரம் மாற்றிக்கொண்டனர். இருவரும் குடும்பத்தின் மூத்தவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது அம்பானி வீட்டு செல்லப்பிராணியான நாய். ஆனந்த் அம்பானியும், ராதிகா மெர்ச்சன்ட்டும் மாற்றிக்கொள்ள நிச்சயதார்த்தம் மோதிரத்தை செல்லப்பிராணி எடுத்துவந்தது. ஆனந்த் அம்பானி ரிலையன்ஸ் குழுமத்தின் ஆற்றல் சார்ந்த வணிகங்களை தலைமை தாங்கி நடத்தி வருகிறார். ராதிகா மெர்சன்ட் என்கோர் ஹெல்த்கேர் குழுமத்தின் இயக்குனாரக உள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web