ப்ளீஸ்!! இந்த இருமல் மருந்துகளை பயன்படுத்தாதீங்க!! உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!!

 
இருமல் மருந்து

இந்திய நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளை குடித்த 19  உஸ்பெகிஸ்தான் குழந்தைகள் பலியான சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த இருமல் மருந்தில் இருந்த எத்திலீன் கிளைகோல் என்ற வேதிப்பொருள் தான், உயிரிழப்புக்கு காரணம் என ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி  நொய்டாவை சேர்ந்த மரியான் பயோடெக் நிறுவனத்தின் AMBRONOL, DOK-1 Max ஆகிய 2 இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. 

உஸ்பெஸ்கிதானில் இந்திய இருமல் மருந்தை குடிந்த குழந்தைகள் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்டியுள்ளது. இந்த குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு தொடர்ந்து 7 நாட்கள் தினமும் 3 அல்லது 4 முறை  5 ml இருமல் மருந்தை குடித்துள்ளனர். மருந்துக்கடைக்காரர்கள் பரிந்துரையின்படி இந்த மருந்து வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நாட்டில் உள்ள அனைத்து மருந்துக் கடைகளிலும் இருந்து Doc-1 Max மருந்தை அந்நாட்டு அரசு திரும்பப்பெற்றுள்ளது" 
இது குறித்து உஸ்பெகிஸ்தான் அரசு இந்தியாவை நேரடியாக குற்றம் சாட்டியது

இருமல்

. இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு கூட்டமைப்பு பதில் அளித்துள்ளது.   இதே போல் அக்டோபரில் ஆப்பிரிக்காவின் காம்பியாவில் இருமல் மருந்து குடித்து 66 குழந்தைகள் பலியான நிலையில் இந்திய மருந்து நிறுவனத் தயாரிப்புகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த மருந்தில் உள்ள ப்ரோமேதசைன் ஓரல் சல்யூஷன், கோஃபெக்ஸ்மாலின் பேபி காஃப் சிரப், மேக்காஃப் பேபி காஃப் சிரப் மற்றும் மேக்ரிப் என் கோல்டு சிரப் ஆகிய 4 மருந்துகள் தான் காம்பியா குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணம் என்று கூறப்பட்டது.

இந்தியாவின் மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டின் தகவலின் படி  மாசுபட்ட மருந்துகளையே காம்பியாவுக்கு ஏற்றுமதி செய்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து காரணமாக  18 குழந்தைகள் பலியானதாக உஸ்பெகிஸ்தான் அரசு குற்றம் சாட்டியுள்ளது. தற்போது உஸ்பெகிஸ்தானில்  18 குழந்தைகளின் உயிரிழப்பிற்கு காரணமாக இருந்த இந்தியாவின் இருமல் மருந்தின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். அத்துடன் குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் குறித்து நொய்டாவில் உள்ள மேரியான் பயோடெக் நிறுவனத்திடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும்  தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் நொய்டாவில் செயல்பட்டு வருகிறது மேரியன் பயோடெக் நிறுவனம். இந்நிறுவனம் டாக்1 மேக்ஸ் என்ற இருமல் மருந்தை தயாரித்துள்ளது. இந்த மருந்தை குடித்ததால் 18 குழந்தைகள் பலியாகி இருப்பதாக உஸ்பெஸ்கிதான் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த இருமல் மருந்தை ஆய்வக பரிசோதனைக்கு உட்படுத்திய போது அதில்  எத்திலின் கிளைகோல் என்ற நச்சுப்பொருள் இருந்ததாக உஸ்பெஸ்கிஸ்தான் சுகாதார அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. இந்த மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரையின்றி அதாவது பெற்றோர்கள் அல்லது பார்மாசிஸ்டுகளின் அறிவுறுத்தலில் பேரில் தான்  குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டது.

இருமல்

ஒரு வேளை குறிப்பிட்ட அளவை தாண்டி அதிக அளவில் இந்த சிரப் கொடுக்கப்பட்டிருக்கலாம் இதனால் அந்த குழந்தைகள் உயிரிழந்திருக்கலாம் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து டாக்-1 மேக்ஸ் மாத்திரைகள் மற்றும் சிரப்கள் அனைத்து பார்மசிகளிலிருந்தும் திரும்பப் பெறப்பட்டு விட்டதாகவும் உஸ்பெஸ்கிதான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web