திருச்சியில் அஜீத் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி!! 10 பேர் காயம்.!!

 
தியேட்டர்

 நடிகர் அஜித்தின் துணிவும், நடிகர் விஜயின் வாரிசு திரைப்படம் திருச்சி மாவட்டத்தில் 17 திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. துணிவு திரைப்படம் பத்துக்கு மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. துணிவு முதல் காட்சி நள்ளிரவு 1:30 மணிக்கு  திரையரங்கில் வெளியிடப்பட்டது. திருச்சி எல்.ஏ திரையரங்குக்கு முன்னதாக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு சாலையில் ஆட்டம் பாட்டத்துடன் துணிவு படத்தை காண வந்தனர். 

தியேட்டர்

எல்.ஏ திரையரங்கு முன்னதாக உள்ள பிரதான சாலை ரசிகர்கள் கூட்டத்தில் வாகனங்கள் ரசிகர்கள் தத்தளித்தது. ரசிகர்கள் உற்சாகத்தில் பேருந்துகளை தட்டியும் ரசிகர்கள் வந்த வாகனங்கள் மீது ஆடி உற்சாகமுடன் இருந்தனர்.  ஆட்டோவின் மீது ஐந்துக்கும் மேற்பட்டோர் மேல் ஏறி நின்றும் உள்ளேயும் ஆடியதால் ஆட்டோ நசுங்கியது. சாலையில் பேருந்துகள் வாகனங்கள் நீண்ட நேரம் நின்றது.  

தியேட்டர்

ரசிகர்கள் தொடர்ந்து கையில் வெடிகளை வைத்து வெடித்து காவல்துறையினர் சொல்வதை கேட்காமல் ஆடிக் கொண்டிருந்தனர். வான வேடிக்கைகளை கையில் எடுத்து ஒரு ரசிகர் உற்சாகத்தில் எல்லைமீறி திரையரங்கு வாசல் கண்ணாடி முன்பும் நான்கு திசைகளிலும் அதனை திருப்பிவிட்டு வெடிக்க செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்திற்க்கு மேல் காவல் துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். அப்போது அஜீத் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இரு சக்கர வாகனங்கள் சாலையில் விழுந்து சேதமடைந்தது. போலீசாரின் தடிஅடியால் ரசிகர்கள் அங்கும் இங்குமாக தெறித்து ஓடினர்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web