பொங்கல் விழா.. பொதுமக்களின் வசதிக்காக திருச்சியில் தற்காலிக பேருந்து நிலையத்தை துவக்கி வைத்து, காவல் ஆணையர் சத்யப்ரியா பேச்சு!

 
சத்யப்ரியா

திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி. சத்தியப்பிரியா,இ.கா.ப., அவர்கள், "பொங்கல்" பண்டிகையை முன்னிட்டு, திருச்சியிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் நலன் கருதியும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், திருச்சி மாநகரில் தஞ்சாவூர் மார்க்கம், புதுக்கோட்டை மார்க்கம் மற்றும் மதுரை மார்க்கம் ஆகிய வழித்தடங்களில் செல்லும் பேருந்துகளுக்காக மன்னார்புரம் சர்வீஸ் ரோடு, தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகளுக்காக வில்லியம்ஸ் ரோட்டில் தொடங்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தை திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் பார்வையிட்டு, தற்காலிக பேருந்து நிலையத்தை நேற்று 13.01.2023-ம்தேதி காலை 10.30 மணிக்கு துவங்கி வைத்தார்கள். மேலும் காவல் துணை ஆணையர்கள், தெற்கு மற்றும் வடக்கு, கண்டோன்மெண்ட் சரக காவல் உதவி ஆணையர், போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல் உதவி ஆணையர் மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர்களுக்கு தக்க அறிவுரை வழங்கினார்கள்.

சத்யப்ரியா

திருச்சி மாநகரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, மாநகர காவல் ஆணையர் அவர்கள் கீழ்கண்ட வழிமுறைகளை கடைபிடிக்க கேட்டுக் கொண்டுள்ளார்.

  • தேசிய நெடுஞ்சாலையில் எக்காரணத்தை கொண்டும் எவ்வித வாகனங்களையும் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தக்கூடாது.
  • பேருந்துகளை அதற்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிறுத்தத்தில் மட்டுமே நிறுத்தி பயணிகளை இறக்கி, ஏற்றவேண்டும். போக்குவரத்து சிக்னல்களில் பயணிகளை இறக்கி, ஏற்றக் கூடாது.
  • வேன்கள், கார்கள் மற்றும் ஆட்டோக்களை அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில்தான் நிறுத்தவேண்டும். போக்குவரத்துக்கு இடையூறாகவும், சாலையோரங்களிலும் நிறுத்தக் கூடாது.
  • வியாபாரிகள் மற்றும் தரைக்கடை வியாபாரிகள் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து கடைகளை அமைத்து விற்பனை செய்யக் கூடாது.

மேற்படி விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இது பற்றிய தகவலை காவல் கட்டுப்பாட்டு அறை எண்:100-க்கும் மற்றும் மாநகர காவல் ஆணையர் அவர்களது அலுவலக Whatsapp No: 9626273399-க்கும் தெரிவிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

சத்யப்ரியா

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், பயணிகளின் நலன் கருதியும் திருச்சி மாநகரில் ஜனவரி 17ம் தேதி வரை தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் மதுரை மார்க்கமாக செல்லும் அனைத்து பேருந்துகளும் கீழ்கண்ட தற்காலிகப் பேருந்து நிலையங்களிலிருந்து இயக்கப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web