பொங்கல் பரிசு: மகன் உதயநிதிக்கு அரசில் கூடுதல் பொறுப்பு!

 
ஸ்டாலின்

‘என் மகன் உதயநிதி என்பதில் பெருமை கொள்கிறேன். அமைச்சராக அவரது செயல்பாடுகளைக் கவனித்து கொண்டிருக்கிறேன். அவரது செயல்களைப் பாராட்டுபவர்களையும், அதே சமயம் அவரை விமர்சனம் செய்து வருகிற விஷயங்களையும் கவனித்து கொண்டு தான் இருக்கிறேன் என மிக சமீபத்தில் கூறியிருந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது பொங்கல் பரிசாக உதயநிதிக்கு கூடுதல் பொறுப்புகளை.. (இல்லைங்க... பதவி இல்லை.. சரியா தான் படிச்சிருக்கீங்க... கூடுதல் பொறுப்புகளை) கொடுத்திருக்கிறார்.

தமிழக அரசு

தமிழக அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் கடந்த டிசம்பர் 14ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு, சிறப்பு திட்ட அமலாக்கம், வறுமை ஒழிப்பு ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் அவருக்கு கூடுதல் பொறுப்புகளை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசாணையில் கூறியிருப்பதாவது...

உதயநிதி

கூடுதல் துறையாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டு நிறுவனம் சேர்க்கப்படுகிறது. இது சிறப்பு திட்ட அமலாக்க துறையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு முன்னர், வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் கீழ் இந்த அமைப்பு இருந்தது என அரசாணையில் கூறப்பட்டது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web