அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் தொகுப்பு! ஓபிஎஸ் வலியுறுத்தல்!

 
அசத்தல்!! மக்களே பொங்கல் சிறப்பு தொகுப்பை பெற தயாராகிட்டீங்களா? தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!!

தமிழக ரேஷன் அட்டைத்தாரர்களில், அரிசி அட்டைத்தாரர்களுக்கு மட்டும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த பொங்கல் தொகுப்பினை, அனைத்து அட்டைத்தாரர்களுக்கும், சர்க்கரை அட்டைத்தாரர்களுக்கும் வழங்க வேண்டும் என்று  முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக ஜனவரி 2ம் தேதி பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் துவக்கி வைக்கப்பட இருந்த நிலையில், ஜனவரி 9ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக வீடு வீடாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த டோக்கன் விநியோகமும் தாமதமாகிறது. இத்தனைக் குளறுபடிகளையும், எதிர் கட்சியாக இருந்த போது மு.க.ஸ்டாலின் எப்படி எதிர்கொண்டு விமர்சித்திருப்பார் என்று நக்கலாக சிரிக்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. முதலில் இலவச வேட்டி, சேலை மட்டும் வழங்கப்பட்டு வந்த நிலையில், அதன்பிறகு பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரொக்கப் பணம் என படிப்படியாக லிஸ்ட் பெரிதாகிக் கொண்டே வந்துள்ளது.

sugarcane

இந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்கு ஆயிரம் ரூபாயுடன், அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படும் என்று கடந்த 22-ந்தேதி அரசு அறிவிப்பு வெளியிட்டது. 2023-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இந்த பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம்பெறாதது குறித்து பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், பொங்கல் பண்டிகைக்கு கருப்பை அரசு கொள்முதல் செய்யும் என்று நம்பி பயிரிட்டதாக விவசாயிகள் தெரிவித்து வந்தனர்.

pongal

பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்குவது தொடர்பாக மூத்த அமைச்சர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில நடைபெறறும் இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், பெரியகருப்பன், சக்கரபாணி மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்புடன் முழுக்கரும்பு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web