உலகக்கோப்பை கால்பந்துக்கு சிக்கல்?! கத்தாரில் வேகமெடுக்கும் ஒட்டகக் காய்ச்சல்!!

 
ஒட்டகக்காய்ச்சல்


2022 ம் ஆண்டுக்கான பிபா உலகக் கோப்பை போட்டிகள் கத்தாரில்  நடைபெற்று வருகிறது. சர்வதேச அளவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள்  முதல்முறையாக வளைகுடா நாடான கத்தாரில் நடைபெறுகிறது.  மிக பிரம்மாண்டமாக நவம்பர் 20ம் தேதி தொடங்கிய இப்போட்டிகள் டிசம்பர் 18ம் தேதி வரை நடைபெறுகின்றன.

ஒட்டகக்காய்ச்சல்
பிபா கூட்டமைப்பை சேர்ந்த 32 அணிகள் இந்த போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. உலகக் கோப்பையை காண பல்வேறு நாடுகளில் இருந்து 12 லட்சம் மக்கள் கத்தாரில் குவிந்துள்ளனர்.  கத்தார் நாட்டின் மக்கள் தொகை  28 லட்சம். இதனால் தற்போது கத்தாரில் சுமார் 40 லட்சம் மக்கள் திரண்டுள்ளனர்.  இந்நிலையில் கத்தாரில் ஒட்டகக் காய்ச்சல் பரவலாம் என  உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 


கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சர்வதேச போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை.  அதன் பிறகு நடைபெறும்  மிகப்பெரிய சர்வதேச நிகழ்வாக அமைந்துள்ளதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத்திய கிழக்கு நாடுகள் பாலைவனம் சார்ந்த பகுதிகள் என்பதால் அங்கு ஒட்டகக் காய்ச்சல் பரவல் என்பது வழக்கமான ஒன்று தான். இந்த காய்ச்சல் அங்கு வசித்து வரும் ஒட்டகங்களில் இருந்து பரவக் கூடியவை.  இந்த காய்ச்சலுக்கு மெர்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டில்  முதலில் பதிவான இந்த காய்ச்சலால் இதுவரை 2600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.  935 பேர் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் மெர்ஸ் தொற்றும் உலகப் பெருந்தொற்றாக பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.

உலககோப்பை கால்பந்து
 இதன் அடிப்படையில்  கத்தார் உலகக் கோப்பையை காணச் சென்றவர்கள் முன்னெச்சரிக்கையுடன் உணவு, குளிர்பானங்களை எடுத்து கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.  அத்துடன் கத்தார் நாட்டின்  சுகாதாரத்துறை தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.இதன் அறிகுறிகளாக காய்ச்சல், மூச்சுத்திணறல், இருமல் இவைகளே. இந்த ஒட்டகக்காய்ச்சல்  உலக கோப்பை கால்பந்து தொடருக்கு சிக்கலாகவே பார்க்கப்படுகிறது. 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web