ஆளுநர் வெளியேறும் வரை போராட்டம்!! திருமாவளவன் அதிரடி கைது!!

 
திருமா

தமிழகத்தில்  நடப்பாண்டில் நடைபெற்ற முதல்  சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுநர் உரையாற்றினார். இந்த உரையில்  தமிழக அரசு அளித்த குறிப்பில் சில வார்த்தைகளை சேர்த்தும், சில வாக்கியங்களை விடுத்தும் வாசித்தார். அத்துடன் முதல்வர் உரையின் போது பாதியில் வெளியேறினார். இது அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய  சர்ச்சையானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தலைமையில் சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகை முன்  முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இந்த  போராட்டத்தில் விசிக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்  என பலரும்  ஆளுநருக்கு எதிராக கண்டன முழக்கங்களை  எழுப்பினர்.

முதல்வர், ஆளுநர்


இந்த  போராட்டத்தில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கு செல்பவர்கள், மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என்று ஆளுநர் பேசுவது, சட்டவிரோதமானது எனக்  குறிப்பிட்டார். இது குறித்து பேசிய திருமா கேரளா, மேற்குவங்காளம் மாநிலங்களை போன்று, தமிழகத்திலும்  ஆளுநர் இல்லாமல் சட்டப்பேரவை கூட்டங்களை நடத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன்  பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், பாஜக ஆதரவாளர்களை ஆளுநராக நியமிக்க கூடாது எனவும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

சட்டசபை ஸ்டாலின் முதல்வர்

மேலும் ஆளுநர் வெளியேறும் வரை போராட்டம் தொடரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.  காவல்துறை தடையை மீறி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால்   திருமாவளவன் மற்றும் நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்

From around the web