பொதுமக்களே உஷார்!! மின்கட்டணம் செலுத்தவில்லை எனக் கூறி டெக்னிக்கல் கொள்ளை!!

 
கடும் உளைச்சலில் பொதுமக்கள்!! 3 நாட்களுக்கு மொபைல் சேவைகள் ரத்து!!

தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே செல்கிறது. அதற்கேற்ப குற்றங்களின் செயல்பாடுகளும், தன்மைகளும் மாறி வருகின்றன.  ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்ப திருடர்களும், திருட்டு சம்பவங்களும் மாறி வருகின்றன. இதே போல் சைபர் க்ரைம் குற்றங்களை புரிவதற்கே வடமாநிலங்களில் அலுவலகங்கள் செயல்பட்டு வருவதாகவும் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. தெரியாத நம்பரில் இருந்து அழைக்கப்படும் இந்த மாதிரியான அழைப்புக்கள் முதலில் வங்கியில் இருந்து பேசுவதாக தெரிவிப்பர். அத்துடன் ஏடிஎம் கார்டின் வேலிடிட்டி முடிந்து விட்டது, ஆன்லைனில் உங்கள் வங்கி எண்ணுக்கு மட்டும் சிறப்பு பரிசு, ஆபர் விலையில் பொருட்கள் விற்பனை , மின்கட்டணம் செலுத்தவில்லை என விதவிதமான காரணங்களை கூறுவர்.

இந்த போலியான தகவல்களை நம்பி ஏமாந்துவிட வேண்டாம். உதாரணமாக  மின்கட்டணம் செலுத்தி விட்டோம் எனக் கூறினால் இன்னும் அப்டேட் ஆகவில்லை உடனே இது குறித்த தகவலை இந்த எண்ணுக்கு தெரியப்படுத்தவில்லை எனில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் எனக் கூறுவர். இதனை நம்பி குறிப்பிட்ட எண்ணிற்கு அழைத்து பேசியவர்கள் இழந்த தொகையும், நபர்களும் அதிகம் என்கின்றன புள்ளி விபரங்கள். இதே போல் பணத்தை பறிகொடுப்பவர்கள் எண்ணிக்கை தினசரி அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இது குறித்து என்னதான் புகார் அளித்தாலும் அவர்களை கண்டறிவதில் தொழில்நுட்ப சிக்கல்கள் தொடர்ந்து நீடித்து வருகின்றன.இந்த வகையான  மோசடியில் ஈடுபடும் நபர்கள் ஒரு முறை பயன்படுத்தும் செயலிகளையும், மொபைல் எண்களையும் மீண்டும் பயன்படுத்துவது கிடையாது.

மொபைல்

 இதனால், அவர்களை ட்ராக் செய்வதில் தொடர்ந்து சிக்கல்கள் நீடித்து வருகின்றன.குறிப்பிட்ட செயலிகளில் தகவல்களை பதிவிட சொல்லுவர். டீம் வீவர் எனப்படும் இந்த செயலியை பற்றி தெரிந்தவர்கள், அதனுள் செல்ல மாட்டார்கள். தெரியாதவர்கள் தப்பி தவறி உள்ளே தகவல்களை பதிவிட முழு செல்போன் பயன்பாடும் அவர்கள் கையில் சென்று விடும் என்ற தகவல் தெரியாமல் பலரும் பணத்தை பறிகொடுத்து வருகின்றனர். பறிகொடுக்கப்படும் பலர் பெரிய அளவில் இருந்தால் மட்டுமே பொதுமக்கள்  புகார் தெரிவிக்கின்றனர். ரூ10000 வரை பறிபோனால் புகார் கொடுப்பதில்லை.  இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் மோசடி  கும்பல் தொடர்ந்து முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறது.

சென்னையில் ஜனவரி 1ம் தேதி பெரம்பலூரில் வசித்து வரும்  ஜோதி ராமலிங்கத்திற்கு  வாட்ஸ் அப்பில் வந்த ஒரு குறுஞ்செய்தியில்  மின் கட்டணம் செலுத்தவில்லை. இது குறித்த தகவல்களை  டீம் வீவர் செயலியில் அப்லோட் செய்யச்சொல்லி தகவல் வந்துள்ளது. அவர் அலெர்ட்டாகி விட்டார். தன்னை பற்றிய தகவல்களை வரிசையாக கேட்ட போதே  தொலைபேசி இணைப்பை துண்டித்து விட்டார்.இதே போல் சென்னையில் பலருக்கும் மின் கட்டணத்தை வைத்து குறுஞ்செய்திகள் வந்து கொண்டே உள்ளன.  

க்ரைம்

முன்பெல்லாம் ஆபரில் அதை தருகிறோம் , இதை தருகிறோம் என ஆசை வார்த்தைகள் கூறியவர்கள் தற்போது  மின் கட்டண மின் இணைப்பு நிறுத்தப்படும் என மிரட்டத் தொடங்கியுள்ளனர். பொதுமக்கள் விழிப்புடன் இருந்தால் மட்டுமே இத்தகைய மோசடி கும்பலிடம் இருந்து தப்பிக்க முடியும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுக்கின்றனர். இந்த குறிப்பிட்ட  செயலியில் நம்முடைய  தகவல்களை வைத்தே நமது மொபைல் போனை அவர்கள் இயக்கத்தொடங்கி விடுகின்றனர்.  மொபைல் எண்ணில் உள்ள வங்கி குறித்த தகவல்களின் மூலம் பணத்தை அபேஸ் செய்து விடுகின்றனர். இதனால் பொதுமக்கள் தான் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் என சைபர் க்ரைம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web