டிசம்பர் 1 முதல் ஜனாதிபதி மாளிகையை பொதுமக்கள் சுற்றிப்பார்க்கலாம்!! முன்பதிவு செய்துட்டீங்களா?!

 
ஜனாதிபதி மாளிகை

இந்திய தலைநகர் டெல்லியில் அமைந்துள்ளது முதல் குடிமகனின் இருப்பிடம் குடியரசுத்தலைவரின் மாளிகை. இதனை ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட நாட்களில் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து விடப்படுவது வழக்கமான நடைமுறை.கடந்த 2 வருடங்களாக கொரோனா தடுப்பு முறைகள், ஊரடங்கு காரணமாக இந்த நடைமுறைகளில் சிறிது மாற்றம் செய்யப்பட்டது. அந்த வகையில் டிசம்பர் 1ம் தேதி பொதுமக்கள் பார்வைக்காக குடியரசுத் தலைவர் மாளிகை திறந்துவிடப்பட உள்ளது. 

ஜனாதிபதி மாளிகை


திங்கட்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து புதன், வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முன்பதிவு செய்து கொண்டு பொதுமக்கள் ஜனாதிபதி மாளிகையை பார்வையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தினமும் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரையும், மாலை 2 மணி முதல் 4 மணி வரையும் தலா ஒரு மணி நேரத்திற்கு முன்பதிவு செய்து கொள்ள முடியும்.

ஜனாதிபதி மாளிகை

இதில் சனிக்கிழமைகளில்  நடைபெறும் குடியரசுத்தலைவர்களின் படைவீரர்கள் மாறும் நிகழ்வு காலை  8 மணி முதல் 9 மணி வரை நடைபெறும். இந்த நிகழ்ச்சியையும் பொதுமக்கள் பார்வையிடலாம். இதற்கும் முன்பதிவு  செய்து கொள்ள வேண்டியது அவசியம். 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web