2023ம் ஆண்டுக்கான பொதுவிடுமுறை பட்டியல் வெளியீடு!! 24 நாட்கள் லீவு!!

 
2023 பொதுவிடுமுறை

2022ம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ளன. புதுவருடத்தை வரவேற்க தயாராகி வரும் வேளையில் அடுத்த ஆண்டிற்கான பொதுவிடுமுறை பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும்  முக்கிய பண்டிகைகள் , விழாக்களுக்கு அரசு ஊழியர்களுக்கு  பொதுவிடுமுறை அளிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் 2023ம் ஆண்டிற்கான விடுமுறை பட்டியலில்  ஞாயிற்றுக் கிழமைகள் தவிர்த்து, 24 நாட்களுக்கு  பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, அரசு தலைமைச் செயலர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "பொது விடுமுறை நாட்களாகக் குறிப்பிடப்பட்ட ஞாயிற்றுக்கிழமைகளுடன் பின்வரும் நாட்களும் 2023-ம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களாகக் கருதப்படும்" எனக் கூறியுள்ளார். 

2023ம் ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியல்:

2023 பொதுவிடுமுறை
ஜனவரி 1 - ஆங்கிலப் புத்தாண்டு.
ஜனவரி 15- தைப்பொங்கல்
ஜனவரி 16-திருவள்ளுவர் தினம்
ஜனவரி17-உழவர் தினம்
பிப்ரவரி  5-தைப்பூசம்


மார்ச் 22- தெலுங்கு வருடப்பிறப்பு
ஏப்ரல் 1- வங்கி ஆண்டு கணக்கு முடிவு
ஏப்ரல் 4- மகாவீர் ஜெயந்தி
ஏப்ரல் 7 -புனித வெள்ளி
ஏப்ரல் 14- தமிழ் புத்தாண்டு
ஏப்ரல் 22- ரம்ஜான் 


மே 1-மே தினம் 
ஜூன் 29- பக்ரீத்
ஜூலை 29-  மொகரம்
ஆகஸ்ட் 15- சுதந்திர தினம் 
செப்டம்பர்  6-கிருஷ்ண ஜெயந்தி 
செப்டம்பர் 17-விநாயகர் சதுர்த்தி 
செப்டம்பர் 28- மிலாடி நபி 

தமிழக அரசு
அக்டோபர்  2- காந்தி ஜெயந்தி 
அக்டோபர் 23 -ஆயுத பூஜை
அக்டோபர் 24 - விஜய தசமி 
நவம்பர் 12 - தீபாவளி 
டிசம்பர்  25- கிறிஸ்துமஸ்


மொத்தம்  24 நாட்கள் பொது விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதில் ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், தைப் பூசம், விநாயகர் சதுர்த்தி, தீபாவளி உட்பட 8 நாட்கள், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருவது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பு, தமிழகத்தில் உள்ள வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும் . 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web